கமலின் ‘இந்தியன் 2’ படத்திலிருந்து விலகிய முக்கிய பிரபலம்.! காரணம் என்ன.?

கமலின் ‘இந்தியன் 2’ படத்திலிருந்து ஒளிப்பதிவாளர் ரத்னவேலு விலகுவதாக தகவல் வெளியாகியுள்ளது .
ஷங்கரின் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து வந்த திரைப்படம் இந்தியன் 2. இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில் உள்ள பூந்தமல்லியில் நடைப்பெற்று வந்த போது கிரேன் விழுந்து 3 பேர் உயிரிழந்தனர் . அதனையடுத்து இந்த படம் கைவிடப்பட்டதாக கூறப்பட்டது.இதனிடையே கமல்ஹாசன் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் எனும் படத்தில் இணைந்தார் .
ஆனால் இந்தியன் -2 படம் கைவிடப்படவில்லை என்று படக்குழுவினர் சார்பிலிருந்து கூறப்பட்டது .லைகா புரொடக்ஷன் தயாரிக்கும் இந்தப் படத்தில் காஜல் அகர்வால்,பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.கொரோனா ஊரடங்கிற்கு பின்னர் பல படங்களின் படப்பிடிப்புகள் தொடங்கிய நிலையில் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு குறித்த எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.
இந்த நிலையில் தற்போது இந்தியன் 2 படத்திலிருந்து ஒளிப்பதிவாளர் ரத்னவேலு விலகுவதாக தகவல் வெளியாகியுள்ளது . படப்பிடிப்பு தொடங்குவதில் தாமதமாக்குவதாலும் ,எனவே அவரால் வேறு புதிய படங்களில் கமிட்டாக முடியாத காரணத்தாலும் இந்தியன் 2 படத்திலிருந்து விலகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இது எந்தளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை.ஏற்கனவே இந்த படத்தில் ஒளிப்பதிவாளராக ஒப்பந்தமான ரவிவர்மன் விலகியதால் பின்னர் தான் ரத்னவேலு ஒளிப்பதிவாளராக ஒப்பந்தமானார் என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : 1,000 முதல்வர் மருந்தகங்கள் திறப்பு முதல்… ரேகா குப்தா தலைமையிலான டெல்லி சட்டப்பேரவை வரை.!
February 24, 2025
வாரத்தின் முதல் நாளே உச்சம்… இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்.!
February 24, 2025
இவ்வாறு நடந்தால் பதவி விலக தயார் – உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அறிவிப்பு!
February 24, 2025