மாஸ்டர் படத்தை பார்க்க ஆவலுடன் இருக்கும் முக்கிய பிரபலம்.!

விஜய்யின் மாஸ்டர் படத்தை பார்த்து விட்டு அனிருத் அவர்கள் சிறப்பாக வந்துள்ளதாகவும், திரையரங்குகளில் பார்க்க காத்திருப்பதாகவும் கூறியுள்ளார்.
நடிகர் விஜய், தற்போது நடித்து முடித்துள்ள திரைப்படம் மாஸ்டர்.இந்த படத்தை மாநகரம், கைதி உள்ளிட்ட வெற்றி படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். இப்படத்தின் கதாநாயகியாக மாளவிகா மோகன் நடிக்கிறார். மேலும் விஜய் சேதுபதி வில்லனாகவும் , சாந்தனு, ஆண்ட்ரியா, கௌரி கிஷன், தீனா, அர்ஜுன் தாஸ் ஆகியோர் முக்கிய வேடங்களிலும் நடித்துள்ளனர். அனிருத்தின் இசையமைப்பில் வெளியான அனைத்து பாடல்களும் டிரெண்டிங்கில் உள்ளது.
ஏப்ரல் மாதத்தில் திரைக்கு வரவிருந்த இந்த படம் பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. தற்போது விஜய் ரசிகர்கள் காத்திருக்கும் ஒரே விஷயம் இப்படத்தின் ரிலீஸ் மற்றும் டீசர் தான்.இந்த நிலையில் தற்போது இசையமைப்பாளரான அனிருத் மாஸ்டர் படத்தை பார்த்து விட்டு மிகவும் சிறப்பாக மாஸ்டர் திரைப்படம் வந்துள்ளதாகவும், திரையரங்குகளில் மாஸ்டர் படத்தை பார்க்க ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருப்பதாகவும் கூறியுள்ளார்.