இதுவரை நாம் அறிந்திராத சோளத்தின் முக்கிய பயன்கள்….!!!
சோளம் நமது அனைவருக்கு தெரிந்த ஒன்று தான். இது நமது உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களையும் கொண்டது. சோளத்தில் உள்ள சத்துக்கள் நமது உடலில் உள்ள பல நோய்களை குணப்படுத்தக்கூடிய ஆற்றல் கொண்டது.
சத்துக்கள் :
சோளத்தில் புரதம், கொழுப்பு, மாவுசத்து, நார்சத்து, இரும்பு சத்து, பி-கரோட்டின், தயாமின் மற்றும் நயாசின் போன்ற சத்துக்கள் உள்ளது.
பயன்கள் :
உடல் உறுதி :
சோளம் உடலுக்கு உறுதியை அளிக்க கூடியது. சோளத்தை சாப்பிட்டு வந்தால் எலும்புகள் மற்றும் நரம்புகள் பலம் அடைந்து, உடல் உறுதியாகவும், ஆரோக்கியமாகவும் இருக்க உதவுகிறது.
தாய்மை :
சோளம் கர்ப்பிணி பெண்களுக்கு மிகவும் சிறந்த ஒரு உணவுப்பொருள். கர்ப்பிணி பெண்களுக்கு குழந்தைகளுக்கு தேவையான அளவு சத்தை கொடுப்பதுடன், தாய்ப்பால் சுரக்க செய்யும் ஆற்றல் கொண்டது.
நீரிழிவு :
சோளத்தை நீரிழிவு நோய் உள்ளவர்கள் அதிகமாக சாப்பிட்டு வந்தால், சக்கரையின் அளவை கட்டுப்படுத்தி ஆரோக்கியத்துடன் வாழ்வதற்கு உதவுகிறது.
கொலஸ்ட்ரால் :
கொலஸ்ட்ரால் அதிகரிப்பால், உடல் எடை அதிகரிப்பு, மாரடைப்பு போன்ற உயிரை பறிக்கும் நோய்கள் ஏற்படுகிறது. சோளத்தை தொடர்ந்து சாப்பிடும்போது மாரடைப்பு நோயிலிருந்து விடுதலை பெறலாம். மேலும் உடல் எடையை குறைப்பதில் இது முக்கிய பங்கு வகிக்கிறது.