விக்ரம் நடிக்கும் “கோப்ரா” படத்தின் முக்கிய அறிவிப்பு.!
நடிகர் விக்ரம் நடிப்பில் உருவாகும் கோப்ரா படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் மீண்டும் தொடங்கியுள்ளதாக இயக்குனர் தெரிவித்துள்ளார்.
நடிகர் விக்ரம் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் கோப்ரா.ஸ்ரீநிதிஷெட்டி, இர்பான் பதான் உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்தில் விக்ரம் பல வேடங்களில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது.இந்த படத்தை இமைக்கா நொடிகள் என்ற வெற்றி படத்தை இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்க 7 ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் தயாரிக்கிறது.ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் வெளியான அனைத்து பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.
தமிழ், தெலுங்கு, மற்றும் இந்தியில் உருவாகும் கோப்ரா படத்தின் படப்பிடிப்பு கொரோனா பரவல் காரணமாக தள்ளி வைக்கப்பட்டிருந்தது .இந்த நிலையில் இன்று முதல் சென்னையில் நடக்கவிருக்கும் கோப்ரா படத்தின் படப்பிடிப்பில் விக்ரம் கலந்து கொண்டுள்ளார்.விக்ரம் புறம் திரும்பி இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்த இயக்குனர் கோப்ரா படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளதாக அறிவித்துள்ளார்.விக்ரம் அடுத்ததாக பொன்னியின் செல்வன் மற்றும் மகன் துருவ் விக்ரமுடன் ஒரு படம் நடிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.
#COBRA Resumes ???????? #ChiyaanVikram @7screenstudio @Lalit_SevenScr @arrahman @SrinidhiShetty7 pic.twitter.com/xZDrHIU0kg
— Ajay Gnanamuthu (@AjayGnanamuthu) December 3, 2020