காதலனை பழிவாங்க காதலியின் வினோதமான செயல்! திகைத்து போன காதலன்!

1000 கிலோ வெங்காயத்தை ஆர்டர் செய்து அதனை தன் முன்னாள் காதலர் வீட்டுக்கு அனுப்பிவைத்த காதலி.
சீனா ஷாண்டோங் மாநிலம், ஜிபோ பகுதியை சேர்ந்த பெண் ஜாவோ. இவர் நீண்ட நாட்களாக ஒருவராய் காதலித்து வந்துள்ளார். ஒவ்வொரு வருடமும், மே 20-ம் தேதி காதலர் தினம் கொண்டாடப்படுவதையடுத்து, தனது காதலனுடன் இணைந்து காதலர் தினத்தை கொண்டாடலாம் என மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருந்தார் ஜாவோ.
ஆனால், ஜாவோவை அவரது காதலர் ஏமாற்றி விட்டார். இதனையடுத்து இவர் மூன்று நாட்களாக அழுதுக் கொண்டே இருந்துள்ளார். இந்நிலையில், அவரது காதலர் தங்களது பிரிவை குறித்து, எந்தவித கவலையும் இல்லாமல் இருப்பதாக தெரிய வந்தவுடன், கோபம் கொண்ட ஜாவோ தனது காதலரை பழிவாங்குவதற்காக ஒரு வினோதமான செயலை செய்துள்ளார்.
இந்நிலையில், ஜாவோ ‘1000 கிலோ வெங்காயத்தை ஆர்டர் செய்து அதனை தன் முன்னாள் காதலர் வீட்டுக்கு அனுப்பிவைத்தார்.அதில் ஒரு கடிதத்தையும் இணைத்திருந்தார் அவர். அந்த கடிதத்தில், நான் மூன்று நாட்கள் அழுதேன், இப்போது உன்னுடைய முறை’ என்று எழுதப்பட்டிருந்தது.
ஜாவோவின் காதலர் வெங்காயத்தைப் பார்த்து திகைத்துப்போய் நின்றுள்ளார். இதுகுறித்து, ஜாவோவின் காதலர் கூறுகையில், தனது முன்னாள் காதலியை வித்தியாசமானவ்ர் என்று கூறினாலும், நான் அழாததற்காக நான் ஒரு மோசமான மனிதனா? என கேள்வியும் எழுப்பி உள்ளார்.