பெண்ணின் உள்ளாடைக்குள் மறைந்திருந்து இங்கிலாந்து வரை பயணம் செய்த சிறிய பல்லி…!
சிறிய பல்லி ஒன்று ஒரு பெண்ணின் பெட்டிக்குள் இருந்த உள்ளாடைக்குள் மறைந்து இருந்தவாறே 4000 கி.மீ பயணம் செய்துள்ளது.
இங்கிலாந்தை சேர்ந்த 47 வயதுடைய லிசா ரஸ்ஸல் எனும் பெண் ஒருவர் பார்படோஸ் எனும் தீவு நாட்டில் இருந்து, தனது சொந்த வீடு உள்ள இங்கிலாந்திற்கு வந்துள்ளார். கிட்டத்தட்ட நான்காயிரம் மைல் தூரம் கடந்து வந்த லிசா வீட்டிற்கு வந்து தனது பெட்டியை திறந்து பார்க்கும் பொழுது தனது உள்ளாடைக்குள் சிறிய பல்லி ஒன்று இருப்பதை கண்டறிந்துள்ளார். இருப்பினும் அந்த பள்ளி இறந்து விட்டதாக நினைத்துள்ளார். அதன் பின்பு அந்த பல்லி நகரத் தொடங்கியதும் சந்தோஷத்தில் தான் சத்தமிட ஆரம்பித்ததாகவும் அந்த பெண் கூறியுள்ளார்.
மேலும், இதுகுறித்து அந்த பெண் கூறுகையில், முதலில் நான் இதை பார்த்ததும் மிகவும் அதிர்ச்சி அடைந்தேன். ஆனால் இந்த சிறிய பல்லி மிகவும் அதிர்ஷ்டசாலி. 4 ஆயிரம் கிலோ மீட்டர், அதாவது 24 மணி நேரம் என்னுடன் இது விமானத்திலேயே பயணம் செய்து வந்துள்ளது. ஆனால் இந்தப் பல்லி பார்படோஸ் பகுதியிலிருந்தே வளர்ந்தது என்பதால் இங்கிலாந்தில் அதனால் இருக்க முடியாது. எனவே மிகுந்த கவலை இருந்தாலும் நான் தற்பொழுது அந்த பல்லியை சிறப்பு ஊர்வன காப்பாளர்களிடம் கொடுத்து விட்டேன். அங்கு அந்த பல்லி நன்றாக இருக்கிறது, என அந்த பெண்மணி கூறியுள்ளார்.