டிவிட்டர் பக்கத்தில் அதிகம் பேசப்பட்டவர்களின் பட்டியல் வெளியீடு…!!
இந்த ஆண்டில் டிவிட்டர் பக்கத்தில் அதிகமாக பேசப்பட்ட நபர்களின் பட்டியலை டிவிட்டர் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் மோடி, அமித்ஷா வரிசையில் நடிகர் விஜய்யும் இடம்பிடித்துள்ளார்.
சமூக வலைதளங்களில் அனைவரது வரவேற்பையும் பெற்று சர்வதேச அளவில் முன்னணியில் இருப்பது டிவிட்டர் பக்கம். டிவிட்டர் பக்கம் மூலமே அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் அனைவரும் மக்களை தொடர்பு கொண்டு வருகின்றனர்.இந்தக் கணக்கை பயன்படுத்தி அவர்கள் தங்களது ஆதரவாளர்கள், ரசிகர்களுக்கு தங்களுடைய கருத்துக்களை தெரிவித்தும் வருகின்றனர்.
இந்நிலையில் இந்த ஆண்டு டிவிட்டர் பக்கத்தில் அதிகம் பேசப்பட்டவர்களின் பட்டியலை டிவிட்டர் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதில் முதலிடத்தை பிரதமர் மோடியும், இரண்டாவது இடத்தை ராகுலும் பிடித்துள்ளனர்.இந்தப் பட்டியலில் இடம்பிடித்தவர்களில் அதிகமானவர்கள் அரசியல்வாதிகளாக உள்ளனர். ஆனால் ஏழாவது மற்றும் எட்டாவது இடங்களை பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மற்றும் கோலிவுட் நடிகர் விஜய் பிடித்துள்ளனர்.