2021 ஆம் ஆண்டிற்கான ஆஸ்கார் விருது பட்டியல்…!
2021 ஆம் ஆண்டிற்கான ஆஸ்கார் விருது பெறுபவர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இன்று 93வது ஆண்டு ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது.
கொரோனா வைரஸ் பரவல் காரணாமாக இந்த ஆண்டு மிக குறைந்த எண்ணிகையிலான விருந்தினர்கள் கலந்துக் கொண்டனர்.இந்த விழாவிற்கு வருகைப் புரிந்த ஹாலிவுட் நட்சத்திரங்கள்,இயக்குநர்கள் மற்றும் விருந்தினர்களுக்கு சிவப்பு கம்பளம் விரிக்கப்பட்டது.
ஆஸ்கார் விருது வழங்கும் நிகழ்ச்சியில் கதை, வசனம், இயக்கம், இசை, நடிப்பு என 23 பிரிவுகளுக்கு விருது வழங்கப்பட்டது.அந்த பட்டியல் இதோ.
- சிறந்த நடிகைக்கான ஆஸ்கார் விருதானது ‘Nomadland’ திரைப்படத்தில் நடித்த பிரான்சஸ் மெக்டொர்மென்ட்க்கு வழங்கப்பட்டது.பிரான்சஸ் மெக்டொர்மென்ட்க்கு 3 வது முறையாக ஆஸ்கார் விருதைப் பெற்றுள்ளார்.
- சிறந்த நடிகருக்கான விருதை ‘தி பாதர்'(The Father) படத்தில் நடித்த ஆண்டனி ஹாப்கின்ஸ் பெற்றார்.
- சிறந்த தழுவல் திரைக்கதை – கிறிஸ்டோபர்-ஃப்ளோரியன் (The Father)
- சிறந்த வெளிநாட்டு திரைப்படத்திற்கான விருது டென்மார்க்கின் ‘அனதர் ரவுண்ட்’ (Another Round) படத்திற்கு வழங்கப்பட்டது.
- சிறந்த துணை நடிகைக்கான விருதை ‘ஜூடாஸ் அண்ட் தி ப்ளாக் மெசியா’ (Judas and the Black Messiah)படத்தில் நடித்த டேனியல் கல்லூயா என்பவர் பெற்றார்.
- சிறந்த ஒப்பனை மற்றும் சிகையலங்காரம் விருதானது ‘மா ரெய்னீஸ் ப்ளாக் பாட்டம்'(Ma Rainey’s black bottom) படத்திற்காக செர்ஜியா லோபஸ், மியா நியல் மற்றும் ஜாமிகா வில்சன் ஆகியோருக்கு வழங்கப்பட்டது.
- சிறந்த இயக்குனருக்கான விருதை நோமட்லாண்ட் (Nomadland) படத்தை இயக்கிய சீனாவை சேர்ந்த பெண் இயக்குனர் க்ளோபி சாவ் பெற்றார்.
- சிறந்த ஆடை வடிவமைக்கான விருது ‘மா ரெய்னீஸ் ப்ளாக் பாட்டம்'(Ma Rainey’s black bottom) என்ற திரைப்படத்திற்காக ஆன் ராத்துக்கு வழங்கப்பட்டது.
- சிறந்த குறும்படத்திற்கான விருது ‘டூ டிஸ்டன்ட் ஸ்ட்ரேன்ஜர்ஸ்’ (Two Distant Strangers)படத்திற்காக ட்ராவன்-மார்ட்டின் ஆகியோருக்கு வழங்கப்பட்டது.
- சிறந்த ஒலிக்கான விருதை நிக்கோலஸ், ஜெய்ம், மிச்செலி, கார்லோஸ், பிலிப் ஆகியோர் ‘சவுண்ட் ஆஃப் மெட்டல்'(Sound of metal) படத்திற்காக பெற்றனர்.
- சிறந்த படத்தொகுப்புக்கான விருதை ‘சவுண்ட் ஆஃப் மெட்டல்'(Sound of metal) படத்திற்காக மிக்கேல் நீல்சன் பெற்றார்.
- சிறந்த அனிமேஷன் திரைப்படதிற்கான விருது ‘சோல்'(Soul) படத்திற்காக பீட் டாக்டர், டானா முர்ரே ஆகியோர் பெற்றனர்.
- சிறந்த இசைக்கான விருதினை ‘சோல்’ (Soul) படத்திற்கு இசையமைத்த ட்ரண்ட் ரெஜ்னர் மற்றும் ரோஸ், ஜான் பாட்டீஸ் ஆகியோர் பெற்றனர்.
- சிறந்த விஷுவல் எபெக்ட்ஸ்க்கான விருது கிறிஸ்டோபர் நோலனின் ‘டெனட்’ (Tenet) படம் பெற்றது.
- சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு விருது ‘மாங்க்'(Mank) திரைப்படத்திற்கு வழங்கப்பட்டது.