தேர்தலில் அதிமுகவுக்கு மக்கள் பாடம் – திருமாவளவன்

கடந்த இரு தினங்களுக்கு முன்பு தமிழகம் முழுவதும் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. அதில் பல தொகுதிகளில் அதிமுக தோல்வியை சந்தித்தது. திமுக உள்ளிட்ட பிற காட்சிகள் முன்னிலை வகித்தன.
இந்நிலையில் சென்னையில் பேசிய விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் உள்ளாட்சி தேர்தல் குறித்து பேசியுள்ளார். அப்பொழுது பேசிய அவர், குடியுரிமை திருத்த சட்ட மசோதாவுக்கு அதிமுக ஆதரவு தந்ததால், தமிழக மக்கள் உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவுக்கு பாடம் புகட்டியுள்ளனர் என கூறியுள்ளார்.
மேலும், குடியுரிமை திருத்த சட்டத்திற்கு கொடுத்த ஆதரவால் தான் அதிமுக பல தொகுதிகளை இழந்துள்ளது எனவும் திருமாவளவன் கூறியுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
லாரி மீது ஆம்புலன்ஸ் மோதி விபத்து – இருவர் உயிரிழப்பு.!
April 11, 2025
விஜய் தலைமையில் இன்று த.வெ.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்.!
April 11, 2025