தனிநபரின் சௌகரியத்திற்காக சட்டத்தை மாற்ற முடியாது – கமல்!
பிக் பாஸ் வீட்டில் தனிநபர் ஒருவர் ஆசைப்படுகிறார் என்பதற்காக விதிமுறைகளை மாற்ற முடியாது என கமல் அர்ச்சனாவிடம் கூறியுள்ளார்.
பிக் பாஸ் வீட்டுக்குள் வைல்ட் கார்டு எண்ட்ரியாக வந்த அர்ச்சனா வெளியில் இருக்கும் பொழுது நல்ல பெயருடன் தொகுப்பாளினியாக வலம் வந்தார். வீட்டிற்குள் வந்த பின்பும் பலருக்கு அச்சுமா என்றால் மிகவும் பிடிக்கும். ஆனால் கடந்த சில நாட்களாக அர்ச்சனாவின் நடவடிக்கைகள் ரசிகர்களை கோபம் அடைய செய்யும் வகையில் உள்ளது. இதற்காக கமல் அவர்களும் அவ்வப்போது தக்க பதிலடியை கொடுத்து வருகிறார்.
இந்நிலையில் இன்று வழக்கம் போல் போட்டியாளர்களை நேரலையில் சந்தித்துப் பேசிய கமல், ரம்யா மற்றும் ஆரி அவர்களின் மனக்கமுறல்களை கேட்டு அறிந்தார். அதன்பின் அர்ச்சனாவிடம் ஒவ்வொருவரின் சௌகரியத்திற்காக எல்லாம் விளையாட்டின் சட்டங்களை மாற்ற முடியாது என காரசாரமாக கூறுகிறார். இதோ அந்த வீடியோ,
View this post on Instagram