அண்ணாத்த திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ஜூன் மாதம் வெளியாகும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் அண்ணாத்த. இந்த மீனா, குஷ்பூ, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, சதீஷ், சூரி, ஜெகபதி பாபு, போன்ற பல நடிகர்கள், நடிகைகள் நடித்து வருகிறார்கள். சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் டி. இமான் இசையமைத்து வருகிறார்.
இந்த திரைப்படம் வருகின்ற தீபாவளி தினத்தன்று வெளியாகும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏற்கனவே வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் படத்திற்கான படப்பிடிப்பு ஹைதராபாத்தில் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வருகின்ற மே 10 ஆம் தேதி படத்திற்கான முழு படப்பிடிப்பும் முடிந்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் தற்போது அண்ணாத்த திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் குறித்த தகவல் ஒன்று கிடைத்துள்ளது அது என்னவென்றால் அண்ணாத்த திரைப்படத்திற்கான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வருகின்ற ஜூன் மாதம் வெளியாகும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை : சினிமா உலகை போல கிரிக்கெட்டில் இருக்கும் சிலரும் அடிக்கடி சில சர்ச்சையான விஷயங்களில் சிக்கிவிட்டு விஷயம் பெரிதாக…
சென்னை : சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதா ஜீவன் சென்னைக்கு வருகை தந்த நிலையில்,…
அகமதாபாத் : இந்திய கிரிக்கெட் அணியும், இங்கிலாந்து கிரிக்கெட் அணியும் டி20 தொடர் மற்றும் ஒருநாள் தொடர்களில் விளையாடி வருகிறது.…
பாரிஸ் : பிரதமர் நரேந்திர மோடி தற்போது மூன்று நாள் பயணமாக பாரிஸிற்கு சென்றுள்ள நிலையில், பாரிஸ் வந்தடைந்த பிரதமர் நரேந்திர…
டெல்லி : கேமிங் விளையாடுவதில் அதிகம் ஆர்வம் காட்டுபவர்கள் என்ன போன் வாங்கலாம் என யோசிப்பது உண்டு. அதிலும், தொடர்ச்சியாக ரியல்மீ…
கொல்கத்தா : தமிழகம் போலவே மேற்கு வங்கத்திலும் அடுத்த ஆண்டு (2026) இடையில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான…