தல 61 குறித்த லேட்டஸ்ட் அப்டேட்… உற்சாகத்தில் அஜித் ரசிகர்கள்..!!
அஜித்தின் 61 படத்தை இயக்குனர் ஹெச் வினோத் இயக்கவுள்ளார் என்பது உறுதியாகிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
நடிகர் அஜித்குமார் தற்போது வலிமை படத்தில் நடித்துவருகிறார். படத்திற்கான கடைசி கட்ட படப்பிடிப்பு ஸ்பெயின் நாட்டில் வருகின்ற ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ளது. மேலும் படத்திற்கான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வருகின்ற மே 1 ஆம் தேதி அஜித் பிறந்த நாள் அன்று வெளியாகவுள்ளது. இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக நடிகர் அஜித்தின் 61 படத்தை எந்த இயக்குனர் இயக்க போகிறார் என்பதை குறித்த தகவல் பரவி வருகிறது.
இந்த நிலையில் தற்போது தல அஜித்தின் 61 படத்தை இயக்குனர் ஹெச் வினோத் தான் இயங்குவதாகவும் அந்த படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பதும் கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டதாகவும் இதனை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.