விக்ரம் – துருவ் விக்ரம் இணைந்து நடிக்கும் சியான் 60 படப்பிடிப்பு 90 சதவீதம் முடிந்துள்ளது.
நடிகர் விக்ரம் மற்றும் அவரது மகனும் நடிகருமான துருவ் விக்ரம் இருவரும் இணைந்து நடித்து வரும் திரைப்படம் “சியான் 60”. இந்த படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்குகிறார். படத்தில் நடிகை சிம்ரன், வாணிபோஜன், பாபி சிம்ஹா உள்ளிட்ட பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கின்றார்கள். படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ தயாரிக்கிறது. படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார்.
இந்நிலையில், இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டின் தொடக்கத்தில் கொடைக்கானலில் தொடங்கியது, இதனையடுத்து தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. விக்ரம், துருவ் விக்ரம், சிம்ரன் உள்ளிட்டோருடன் சமீபத்தில் மேற்குவங்க மாநிலம் டார்ஜிலிங் சென்ற படக்குழுவினர் 90 சதவீத படப்பிடிப்பை முடித்துள்ளனர். அடுத்ததாக இறுதிக்கட்டப் படப்பிடிப்பை நேபாள எல்லையில் எடுக்க திட்டமிட்டுள்ளனர்.
அதுவும் முடித்து விட்டால் சியான் 60 படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என்று கூறப்படுகிறது. விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை : நேற்று மாலை மாரடைப்பால் உயிரிழந்த நடிகர் ஸ்ரீதர் உடல் சென்னை தி.நகரில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக…
சென்னை : நேற்றைய ஐபிஎல் ஆட்டத்தில் டெல்லி அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் சென்னை அணி தோல்வியைத் தழுவியுள்ளது. முதலில்…
நீலகிரி : உதகையில் ரூ.143.69 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து…
டெல்லி : வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார். எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பு காரணமாக,…
ராமேஸ்வரம் : புதிய பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார். பாம்பன் ரயில் பாலத்தின் கட்டுமானப்…
சண்டிகர் : இன்றைய ஐபிஎல் போட்டியில் ஷ்ரேயஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான்…