அண்ணாத்த திரைப்படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்.!

Default Image

அண்ணாத்த படத்திற்கான இறுதிக்கட்ட படப்பிடிப்பாக படக்குழு லக்னோ சென்றுள்ளனர்.

இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் அண்ணாத்த. இந்த திரைப்படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. படத்திற்கு இசையமைப்பாளர் டி.இமான் இசையமைத்துள்ளார். படத்தில் குஷ்பு, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், மீனா, ஜெகபதி பாபு, சூரி, சதிஷ், போன்ற பல பிரபலங்கள் நடித்துள்ளனர்.

படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கி உள்ள நிலையில், படத்தின் தங்களுக்கான படப்பிடிப்பை முடித்த ரஜினிகாந்த், மீனா, சதீஸ் ஆகியோர் தங்களுக்கான டப்பிங் பணிகளை தொடங்கி முடித்துள்ளனர்.
இந்த நிலையில், படத்திற்கான இறுதிக்கட்ட படப்பிடிப்பாக படக்குழு லக்னோ சென்றுள்ளனர். அங்கு படத்தின் படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. இதனையடுத்து படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் குறித்த அப்டேட் விரைவில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்