சிஎஸ்கே ஜெர்சியில் சிலம்பரசன்..! வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படங்கள்.!!
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
சிம்பு CSK அணியின் ஜெர்சியில் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் சிம்பு தற்போது நடித்து முடித்துள்ள திரைப்படம் மாநாடு. படத்திற்கான இறுதிக்கட்ட பணிகள் விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. வரும் நவம்பர் மாதம் 4-ஆம் தேதி தீபாவளி விருந்தாக இப்படம் வெளியாகிறது.
இந்த படத்தை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார். படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த திரைப்படம் தீபாவளி விருந்தாக வரும் நவம்பர் -4ஆம் தேதி வெளியாகிறது.
இந்த படத்தை தொடர்ந்து இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் உருவாகும் வெந்து தணிந்தது காடு என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படப்பிடிப்பு படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தை தொடர்து பத்து தல படத்திலும் நடிக கமிட் ஆகியுள்ளார்.
இந்நிலையில், தற்போது சிம்பு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஜெர்சியில் ரசிகர்களுடன் எடுத்த புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. வரும் 19-ஆம் தேதி ஐபிஎல் போட்டிகள் தொடங்கவுள்ள நிலையில் சிம்பு சிஎஸ்கே ஜெர்சியில் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.