சிம்புவின் மாநாடு படம் குறித்து வெளியான லேட்டஸ்ட் தகவல்.! மகிழ்ச்சியில் ரசிகர்கள்.!

பாண்டிச்சேரியில் நடைபெற்று வந்த மாநாடு படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விட்டதாகவும் , அடுத்தகட்ட படப்பிடிப்பு சென்னையில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
நடிகர் சிம்பு சுசீந்திரன் அவர்களின் இயக்கத்தில் “ஈஸ்வரன்” படத்தின் படப்பிடிப்பை நன முடித்து விட்டு , பாண்டிச்சேரியில் நடைபெற்று வந்த மாநாடு படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டார்.
இதில் சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன் உள்ளிட்ட பலர் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி கலந்து கொண்டுள்ளனர் . வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தினை சுரேஷ் காமாட்சி தயாரிக்கிறார் .மேலும் பாரதிராஜா, கருணாகரன், பிரேம்ஜி,எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட பலர் நடிக்கும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார் .
மாநாடு படத்தில் சிம்பு இஸ்லாமிய இளைஞனான அப்துல் காலிக் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
கடந்த சில வாரங்களாக பாண்டிச்சேரியில் நடைபெற்று வந்த மாநாடு படத்தின் படப்பிடிப்பு தற்போது முடிவடைந்து விட்டதாகவும் , அடுத்தக்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.விரைவில் மாநாடு படத்தின் படப்பிடிப்பையும் முடித்து விட்டு சிம்பு மஃப்டி ரீமேக்கில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது .மேலும் மாநாடு படத்தினை ஏப்ரல் மாதத்தில் திரையிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
ஏப்ரல் 16 ஐபிஎல் “சூப்பர் ஓவர்” நாளா? மீண்டும் மீண்டும் அதே நாளில் டெல்லிக்கு நடந்த சம்பவம்!
April 17, 2025
நெல்லையில் பரபரப்பு: நாங்குநேரி மாணவன் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல் நடத்திய கும்பல்.!
April 16, 2025