வலிமை திரைப்படம் வெளியாகும் தேதி குறித்த லேட்டஸ்ட் தகவல்..!!
அஜித்குமார் நடித்து வரும் வலிமை திரைப்படம் ஆகஸ்ட் மாதம் 12 ஆம் தேதி ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது.
அஜித்குமார் நடிப்பில் இயக்குனர் ஹெச் வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் வலிமை. தயாரிப்பாளர் போனி கபூர் தயாரிக்கும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். இந்த படத்தில் நடிகர் அஜித்திற்கு ஜோடியாக நடிகை ஹுமா குரேஷி நடித்துள்ளார் . மேலும் அஜித்திற்கு வில்லனாக கார்த்திகேயா நடித்துள்ளார்.
இந்த நிலையில் இந்த திரைப்படத்தை குறித்து கிடைத்த தகவல் என்னவென்றால் இந்த வலிமை திரைப்படத்தை வருகின்ற ஆகஸ்ட் மாதம் 12 ஆம் தேதி ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது. விரைவில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருடன் ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வலிமை படத்திற்கான பர்ஸ்ட் லுக் போஸ்டர் வருகின்ற மே 1 அஜித் பிறந்த நாளை முன்னிட்டு வெளியாகும் என்று தயாரிப்பாளர் போனி கபூர் கடந்த 15 ஆம் தேதி தெரிவித்திருந்தார். இதனால் அஜித் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்ப்புடன் காத்துள்ளார்கள்.