மாதவன் நடித்த எவனோ ஒருவன் பட இயக்குநரான நிஷிகாந்த் காமத் கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.
பிரபல பாலிவுட் இயக்குநரான நிஷிகாந்த் காமத் கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்ததை அடுத்து தற்போது அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
கடந்த சில மாதங்களாக பல பிரபலங்களை கொரோனாவாலும், சிலர் வேறு நோய்களாலும் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். பாலிவுட் திரையுலகில் இர்பான் கான், ரிஷி கபூர், சுஷாந்த் சிங் உள்ளிட்ட பலர் மரணமடைந்தனர்.
அந்த வகையில் தமிழில் மாதவனின் எவனோ ஒருவன் படத்தை இயக்கியவரும்,பாலிவுட்டின் பிரபல இயக்குநருமானவர் நிஷிகாந்த் காமத் கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டு ஹைதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார் . சமீபத்தில் அவரது நிலை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்பட்டு வந்தது. தற்போது இவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். அவரது குடும்பத்தினருக்கு திரையுலக பிரபலங்கள் இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர். இவர் மலையாளத்தில் மெகா ஹிட் படமான திரிஷ்யம் படத்தின் இந்தி ரீமேக்கை இயக்கியவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : விடுதலை 2 திரைப்படம் வெற்றிமாறனின் தலை சிறந்த படைப்புகளின் பட்டியலில் இடம் பெற்றுவிட்டது என்று தான் சொல்லவேண்டும். அந்த…
சென்னை : தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் 6-முதல் 12-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவியர்களின் உயர் கல்விக்கான செலவை…
சென்னை : மத்திய அரசின் தேசிய தேர்வு முகமையால் நடத்தப்படும் யுஜிசி – நெட் தேர்வு 30 பாடங்களுக்கு ஜனவரி 15,…
டெல்லி : கடந்த ஆகஸ்ட் மாதம் வங்கதேசத்தில் ஏற்பட்ட உள்நாட்டு கலவரத்தில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். இந்த உள்நாட்டு கிளர்ச்சி உச்சத்தில்…
சென்னை : மெட்ரோ நிர்வாகம் தற்போது, இரண்டாம் கட்ட திட்டத்தில் ஓட்டுநர் இல்லாமல் இயக்கப்படும் மெட்ரோஇரயில்களை தயாரிப்பதற்கான ஒப்பந்தத்தை ரூ.3,657.53 கோடி…
கிறிஸ்மஸ் தாத்தா உருவான வரலாறு, கிறிஸ்மஸ் ட்ரீ வைக்க காரணம் மற்றும் வீட்டில் ஸ்டார் வைப்பது எதற்காக என்றும் இந்த…