நேற்று வெளியான கர்ணன் டீசர் தற்போது யூடியூபில் 3.8 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது.
நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள கர்ணன் படத்திலிருந்து வெளியான அணைத்து பாடல்களும் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வரும் நிலையில், நேற்று படத்திற்கான டீசர் வெளியானது வெளியான சில மணி நேரத்தில் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல விமர்சனத்தையும் நல்ல வரவேற்பையும் பெற்றது. இந்த டீசர் தற்போது யூடியூபில் 3.8 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது.
இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கியுள்ள இந்த படத்தை தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு தயாரித்துள்ளார். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். மேலும் இந்த படத்தில் நடிகர் யோகி பாபு, லால், ராஜீஷா விஜயன், லட்சுமி பிரியா, கௌரி கிஷன் போன்றோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். டீசரை பார்த்த ரசிகர்கள் படத்தை பார்க்க மிகவும் ஆர்வத்துடன் காத்துள்ளார்கள். மேலும் வருகின்ற ஏப்ரல் 9 ஆம் தேதி கர்ணன் படம் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்டாய கடன் வசூலை தடுக்கும் பொருட்டு புதிய…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம்தாக்குதலில் 26 இந்தியர்கள் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு TRF எனும் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்று இருந்தது.…
விருதுநகர் : பட்டாசு ஆலையில் தீ விபத்து சம்பவங்கள் அவ்வப்போது நடைபெறுவது தொடர் கதையாகி வருகின்றன. இன்றும் சிவகாசி அருகே…
லண்டன் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதியன்று காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர்…
கோவை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் இன்றும் நாளையும் அக்கட்சி பூத் கமிட்டி நிர்வாகிகள் கலந்து கொள்ளும்…
சென்னை : இன்றும் நாளையும் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில்…