டப்பிங் பணிகளை தொடங்கிய காக்கி படக்குழுவினர்.!

காக்கி படத்தில் நடிக்கும் ஸ்ரீகாந்த் அவர்களின் கதாபாத்திரத்திற்கான டப்பிங் பணிகளை அனைவரும் மாஸ்க் அணிந்தப்படி தனிமனித இடைவெளியை பின்பற்றி கொண்டு தொடங்கிய புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளனர்.
சாந்தனு நடிப்பில் வெளியான வாய்மை படத்தை இயக்கிய செந்தில்குமார் அவர்கள் இயக்குத்தில் உருவாகும் அடுத்த படம் காக்கி. இந்த படத்தில் விஜய் ஆண்டனி, ஸ்ரீகாந்த்,, சத்யராஜ், இந்துஜா, ஈஸ்வரி ராவ், ஜான் விஜய், ரவி மரியா உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஆகத் இசையமைக்கும் இந்த படத்திற்கு மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். ஒரு ஆக்ஷன் திரில்லர் கலந்த இந்த படத்தில் விஜய் ஆண்டனி போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னை, மதுரை, பெங்களூர், சிவமோகா உள்ளிட்ட இடங்களில் நடைபெற்றது.
ஊரடங்கு காரணமாக படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டது மட்டுமில்லாமல் வேலைநிறுத்தமும் செய்யப்பட்டுள்ளது. இதனால் பல படங்களின் பணிகள் தடை செய்யப்பட்டது. சமீபத்தில் தமிழக அரசு முடங்கிக் கிடக்கும் படங்களின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளை துவங்க அனுமதி கொடுத்தது அடுத்து கிடப்பில் கிடந்த பல படங்களின் இசை பணிகளும், போஸ்ட் புரொடக்ஷன் பணிகளையும் தொடங்கினர். இந்த நிலையில் தற்போது காக்கி படத்தின் டப்பிங் பணியையும் தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்ட படி ஆரம்பித்துள்ளனர். ஆம் காக்கி படத்தில் நடிக்கும் ஸ்ரீகாந்த் அவர்களின் கதாபாத்திரத்திற்கான டப்பிங் பணிகளை அனைவரும் மாஸ்க் அணிந்தப்படி தனிமனித இடைவெளியை பின்பற்றி கொண்டு தொடங்கிய புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : சட்டப்பேரவையின் இறுதி நாள் முதல்.., ‘பத்மபூஷன்’ அஜித்துக்கு குவியும் வாழ்த்துக்கள் வரை.!
April 29, 2025
கனடா தேர்தல் : 22 பஞ்சாபியர்கள், 2 ஈழ தமிழர்கள் வெற்றி!
April 29, 2025
சீனா: உணவகத்தில் பயங்கர தீ விபத்து…22 பேர் பலி!
April 29, 2025