2020-ம் ஆண்டு ஆஸ்கர் விருதில் ஜோக்கர் திரைப்படம் 11 பிரிவில் பரிந்துரை செய்து பட்டியல் வெளியீடு.!

Default Image
  • லாஸ் ஏஞ்சலஸில் 92-வது அகாடமி விருதுகள் பிப்ரவரி 9-ம் தேதி நடைபெறவுள்ளது, ஆஸ்கர் விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்ட படங்களின் பட்டியலை வெளியிடப்பட்டுள்ளன.
  • இந்த ஆண்டு ஹாலிவுட்டின் ஜோக்கர் திரைப்படம் , அதிகபட்சமாக 11 பிரிவுகளில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

உலகில் சினிமாவுக்கென்று வழங்கப்படும் மிக பெரிய விருதுகாக ஆஸ்கர் விருது கருதப்படும். 92-வது அகாடமி விருதுகள் லாஸ் ஏஞ்சலஸில் பிப்ரவரி 9-ம் தேதி நடைபெற உள்ளது. அந்த விழாவில் கடந்த ஆண்டு 2019-ம் ஆண்டு வெளியான சிறந்த படங்கள், சிறந்த நடிகர்கள், கலைஞர்களுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டு வழங்கப்படும். ஆஸ்கர் விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்ட படங்களின் பட்டியலை வெளியிடப்பட்டுள்ளன. அதாவது, இந்த ஆண்டு ஹாலிவுட்டின் ஜோக்கர் திரைப்படம் , அதிகபட்சமாக 11 பிரிவுகளில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து, ஐரிஷ்மேன், ஒன்ஸ் அப் ஆன் எ டைம் இன் ஹாலிவுட், 1917 ஆகிய படங்கள் 10 ஆஸ்கர் விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஜோக்கர் திரைப்படம், சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குநர் மற்றும் சிறந்த நடிகர் உட்பட 11 பிரிவுகளில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. ஜோக்கர் கதாபாத்திரத்தில் நடித்த ஹாக்கின் ஃபீனிக்ஸ் சிறந்த நடிகருக்கான பரிந்துரை பட்டியலில் இடம்பெற்றுள்ளார். அடுத்தபடியாக தி ஐரிஷ் மேன், 1917 மற்றும் ’ஒன்ஸ் அபான் எ டைம் இன் ஹாலிவுட்’ ஆகிய திரைப்படங்கள் 10 பிரிவுகளில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளன. ஒன்ஸ் அபான் எ டைம் இன் ஹாலிவுட், திரைப்படத்தில் நடித்த பிராட் பிட் சிறந்த துணை நடிகர் விருதுக்கான பட்டியலில் இடம்பெற்றுள்ளார்.

2019-ம் ஆண்டு சிறந்த நடிகருக்கான விருதை ‘போமேனியன் ராப்சோடி’ படத்துக்காக ராமி மலேக்கும், சிறந்த நடிகைக்கான விருதை தி ஃபேவரைட் திரைப்படத்துக்காக ஒலிவியா கோல்மேனும், சிறந்த இயக்குநருக்கான விருதை ‘ரோமா’ திரைப்படத்துக்காக அல்போன்சா குவாரனும் பெற்றனர். தி ஃபேவரைட், ரோமா ஆகிய திரைப்படங்கள் தலா 10 விருதுகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டிருந்த நிலையில், ரோமாவுக்கு மட்டும் 3 விருதுகள் கிடைத்திருந்தது.

சிறந்த திரைப்படம், உண்மைத் திரைக்கதை, சிறந்த துணை நடிகர் உள்ளிட்ட மூன்று விருதுகளை கிரீன் புக் திரைப்படம் வென்றது. அதிகபட்சமாக போமேனியன் ராப்சோடி திரைப்படம் நான்கு விருதுகளை பெற்றது. குறிப்பாக மலிவு விலை நாப்கினை உருவாக்கிய கோயம்புத்தூரை சேர்ந்த அருணாச்சலம் முருகானந்தம் நடித்த பீரியட் எண்டு ஆஃப் சென்டன்ஸ், சிறந்த குறும் ஆவணப்படத்துக்கான ஆஸ்கார் விருதை தட்டிச் சென்றது. இந்த வருடமும் கடந்த வருடத்தை போன்றே தொகுப்பாளர் இன்றி ஆஸ்கர் விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெறும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்