இன்று இல்லை…தீபாவளிக்கு முன்னரே ஜியோ நெக்ஸ்ட் ஸ்மார்ட்போன் விற்பனை – ஜியோ நிறுவனம் அறிவிப்பு..!

Default Image

ஜியோ நெக்ஸ்ட் ஸ்மார்ட் போன், தீபாவளிக்கு முன்னதாக மட்டுமே விற்பனைக்கு வரும் என ஜியோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

கூகுள் மற்றும் ரிலையன்ஸ் கூட்டணியில் உருவான ஜியோ நெக்ஸ்ட் ஸ்மார்ட்போன் செப்டம்பர் 10 விநாயகர் சதுர்த்தியான இன்று விற்பனைக்கு வரும் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில்,ஜியோ நெக்ஸ்ட் ஸ்மார்ட் போன், தீபாவளிக்கு முன்னதாக மட்டுமே விற்பனைக்கு வரும் என ஜியோ நிறுவனம் தெரிவித்துள்ளது. சர்வதேச அளவில் செமிகண்டக்டர்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் திட்டமிட்டபடி அதன் தயாரிப்பு முழுமை அடையவில்லை என்பதனால்,விற்பனை தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக, ஜியோ தனது அறிவிப்பில் கூறியிருப்பதாவது: “இந்த கூடுதல் நேரம் தற்போதைய தொழில்துறை அளவிலான, உலகளாவிய பற்றாக்குறையை தணிக்க உதவும். ஜியோபோன் நெக்ஸ்ட் என்பது 2ஜி வசதி கொண்ட தொலைபேசிகளை பயன்படுத்தும் மக்களை அதிவேக இணையத்துடனான சாதனத்தை பயன்படுத்த வைப்பதே ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் விலை சுமார் 3 ஆயிரத்து 500 ரூபாயாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.மேலும்,விலை குறைவான Qualcomm QM214 பிளாட்பார்மில் தயாராகும் இந்த போனில்,13 எம்பி சிங்கிள் லென்ஸ் பின்புற கேமரா மற்றும் செல்பிக்காக 8 எம்பி கேமரா இருக்கும் என கூறப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்