அப்பாடா!ஒரு வழியா ரிலீஸ் குறித்து முடிவு செஞ்சிட்டங்க போல ‘ஜகமே தந்திரம்’ டீம்.!

Published by
பால முருகன்

தனுஷின் ஜகமே தந்திரம் படத்தினை தமிழக தேர்தலை பொறுத்து மார்ச் அல்லது மே மாதத்தில் ரிலீஸ் செய்ய முடிவு செய்தததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நடிகர் தனுஷ் நடிப்பில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ஜகமே தந்திரம். மேலும் சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தை y not studios தயாரித்துள்ளது. இந்த படத்தில் நடிகர் தனுஷிற்கு ஜோடியாக ஐஸ்வர்யா லெக்ஷ்மி நடித்துள்ளார். இந்த திரைப்படத்தில் நடிகர் கலையரசன் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

கேங்ஸ்டர் திரைப்படமாக உருவாகியுள்ள இந்த திரைப்படம் கடந்த ஆண்டு மே மாதம் 1ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருந்த நிலையில், கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ரிலீஸ் தேதி தள்ளி சென்றது.இந்த நிலையில் சமீபத்தில் தனுஷின் கர்ணன் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் ஜகமே தந்திரம் படத்தின் ரிலீஸ் குறித்த செய்திகள் பரவ தொடங்கியது.முதலில் தயாரிப்பு நிறுவனம் பிப்ரவரி 12-ம் தேதி ஜகமே தந்திரம் படத்தினை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாகவும், அதற்கு தனுஷ் மற்றும் இயக்குனர் ஒப்பு கொண்டதாகவும் கூறப்பட்டது.ஆனால் அதன் பின் திரைப்படத்தை தயாரிப்பு நிறுவனம் ஓடிடியில் நேரடியாக வெளியிட திட்டமிட்டுள்ளதாகவும் ,இதனால் தனுஷ் மற்றும் தயாரிப்பு நிறுவனமிடையே மனக்கசப்பு ஏற்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தது.

இது குறித்து தனுஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் ,அனைவரையும் போலவே ஜகமே தந்திரமின் திரையரங்கு வெளியீட்டையே நானும் எதிர்நோக்கி காத்திருப்பதாக கூறியதை தொடர்ந்து ஜகமே தந்திரம் படத்தின் ரிலீஸ் குறித்த பேச்சுவார்த்தை மும்மரமாக நடைபெற்று வந்தது.அதன் விளைவாக ஜகமே தந்திரம் படத்தினை தியேட்டரில் ரிலீஸ் செய்ய படக்குழுவினர் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதாவது தமிழகத் தேர்தலை ஏப்ரல் மாதம் அறிவித்தால் மே மாதம் ஜகமே தந்திரம் படத்தை தியேட்டர்களில் ரிலீஸ் செய்யலாம் என்றும் ,அல்லது தமிழக தேர்தல் மே மாதம் என்றால் என்றால் மார்ச் மாதத்திலையே படத்தை ரிலீஸ் செய்யலாம் எனப் படக்குழுவினர் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.எனவே விரைவில் படத்தின் ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Published by
பால முருகன்

Recent Posts

பஞ்சாப் ரொம்ப உக்கிரமா இருப்போம்! எதிரணிக்கு எச்சரிக்கை விட்ட பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங்!

பஞ்சாப் ரொம்ப உக்கிரமா இருப்போம்! எதிரணிக்கு எச்சரிக்கை விட்ட பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங்!

பஞ்சாப் : இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் வரும் மார்ச் 22-ஆம் தேதி முதல் தொடங்கப்படவுள்ள நிலையில், போட்டியில் விளையாடும் அணிகள்…

19 minutes ago

இந்த வருஷம் ஒன்னில்ல.., மொத்தம் 13.! களைகட்டும் ஐபிஎல் திருவிழா!

டெல்லி : இந்த வருட ஐபிஎல் (IPL 2025) திருவிழா வரும் மார்ச் 22ஆம் தேதி கொல்கத்தா ஈடன் கார்டன்…

31 minutes ago

வானதி சீனிவாசன் கேட்ட கேள்வி…அண்ணாமலையை சீண்டி பதிலடி கொடுத்த அமைச்சர் செந்தில் பாலாஜி..!

சென்னை : டாஸ்மாக் டெண்டர்களில் சுமார் ரூ.1000 கோடி முறைகேடு நடைபெற்றுள்ளதாக கூறப்பட்ட நிலையில் அதற்கு பொறுப்பேற்று அமைச்சர் செந்தில் பாலாஜி…

1 hour ago

மனைவி கண்முன்னே ரவுடி வெட்டிக்கொலை! 3 பேர் மீது போலீஸ் என்கவுண்டர்!

ஈரோடு : சேலம் மாவட்ட சரித்திர பதிவேடு குற்றவாளி ரவுடி ஜான் எனும் சாணக்யாவை மர்ம கும்பல் ஒன்று இன்று…

2 hours ago

வீர தீர சூரன் இப்படி தான் இருக்கும்! உண்மையை போட்டுடைத்த எஸ்.ஜே. சூர்யா!

சென்னை : தங்கலான் படம் எதிர்பார்த்த அளவுக்கு மக்களுக்கு மத்தியில் பெரிய வரவேற்பை பெறவில்லை என்கிற காரணத்தால் அடுத்ததாக நடிகர்…

2 hours ago

நாக்பூர் கலவரம் : முக்கிய புள்ளியை தூக்கிய போலீசார்..யார் இந்த பாஹிம் கான் ?

மகாராஷ்டிரா :  மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் வெடித்த வன்முறையானது பெரிய அளவில் பேசுபொருளாக வெடித்திருக்கிறது. சாம்பாஜி நகரிலுள்ள அவுரங்கசீப் கல்லறையை அகற்றவேண்டுமென…

3 hours ago