மிரட்டலாக வெளிவந்த “லட்சுமி பாம்” டிரைலர்..!

அக்ஷய் குமார் நடிப்பில் உருவாகியுள்ள லட்சுமிபாம் திரைப்படத்தின் டிரைலர் தற்பொழுது வெளியாகியுள்ளது.
இயக்குனர் லாரன்ஸ் இயக்கத்தில் அவரே இயக்கி அவரே தயாரித்து நடித்த திரைப்படம் காஞ்சனா. இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது. மேலும் இந்த திரைப்படத்தை தற்போது இந்தியில் லட்சுமிபாம் என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது.
இந்த படத்தையும் இயக்குனர் லாரன்ஸ் இயக்கியுள்ளர். இந்த படத்தில் பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார், கியாரா அத்வானி, போன்ற பல பிரபலங்கள் நடித்துள்ளனர். கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக இந்த திரைப்படம் வருகிற நவம்பர் மாதம் 9ம் தேதி (Disney+ hotstar) டிஸ்னி ஹாட்ஸ்டார் என்ற ஒடிடி இணையத்தளத்தில் ரிலீஸ் தளத்தில் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு அண்மையில் படக்குழு அறிவித்தனர்.
இந்த நிலையில் தற்போது இந்த திரைப்படத்தின் டிரைலரை இயக்குனர் ராகவா லாரன்ஸ் தற்போது வெளியிட்டுள்ளார். அந்த டிரைலர் ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பைப் பெற்று படத்தின் மீது எதிர்பார்ப்பை அதிகமாக்கியுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
தீவிரவாத தாக்குதல்…, நடிகர் அஜித் கேட்டு கொண்டது இதைத்தான்!
April 29, 2025
குஜராத்தை கதறவிட்ட 14 வயது சிறுவன்…ராஜஸ்தான் த்ரில் வெற்றி!
April 28, 2025