#Breaking:”எப்படியாவது,இந்தியர்கள் உடனே வெளியேறுங்கள்” -இந்திய தூதரகம் அவசர உத்தரவு!
உக்ரைன் தலைநகர் கீவ் பகுதியில் உள்ள இந்திய மக்கள் மற்றும் மாணவர்கள் உடனே வெளியேறுமாறு இந்திய தூதரகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா 6-வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது.போர் தீவிரமடைந்திருக்கும் இந்த சூழலில் அங்கு சிக்கி தவிக்கும் இந்திய மக்கள் மற்றும் மாணவர்களை மீட்பதற்காக மத்திய அரசு பல்வேறு தீவிர முயற்சிகளை எடுத்து வருகிறது.அந்த வகையில் ஆபரேசன் கங்கா மூலம் உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க நான்கு மத்திய அமைச்சர்கள் உக்ரைனின் அண்டை நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளனர்.
அதே சமயம்,டெல்லியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்களை பிரதமர் மோடி இன்று சந்தித்துள்ளார்.இந்த சந்திப்பின்போது, உக்ரைன் விவகாரம் தொடர்பாக பேசியதாகவும்,மேலும்,உக்ரைன் விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாடு,மாணவர்கள் மீட்பு பணி குறித்து பிரதமர் விளக்கம் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியது.
இந்நிலையில்,உக்ரைன் தலைநகர் கீவ் பகுதியில் உள்ள மாணவர்கள் உள்ளிட்ட இந்தியர்கள் உடனே வெளியேறுமாறு உக்ரைனில் உள்ள இந்திய தூதரகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கீவ் பகுதியை ரஷ்ய ராணுவம் கிட்டத்தட்ட முழுமையாக சூழ்ந்து விட்ட நிலையில்,ரயில்கள் உள்ளிட்ட வாகனங்கள் மூலம் எப்படியாவது கீவ் பகுதியில் இருந்து உடனடியாக வெளியேறுமாறு இந்திய தூதரகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
Embassy of India in Ukraine advises Indians to leave Kyiv urgently today pic.twitter.com/tmoXpWTd1l
— ANI (@ANI) March 1, 2022