இந்திய ஏ அணி  4-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது!

Default Image

மணீஷ் பாண்டே தலைமையில் இந்திய ஏ அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்று பயணம் மேற்கொண்டு ஐந்து ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வந்தது. இந்த தொடரில் இந்திய ஏ அணி முதல் மூன்று போட்டிகளில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.

Image result for இந்திய ஏ அணி

நான்காவது போட்டியில் இந்திய ஏ அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்நிலையில் நேற்று நடந்த ஐந்தாவது போட்டியில்  டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ்  ஏ அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. வெஸ்ட் ஏ  இண்டீஸ் அணி  47.5 ஓவரில் 247 ரன்கள் அடித்தது.

இந்திய ஏ அணியில் தீபக் சாஹர் ,ராகுல் சாஹர் ,சைனி ஆகியோர் தலா 2விக்கெட்டை வீழ்த்தினார்.பின்னர் இந்திய ஏ அணி 32 ஓவரில் இரண்டு விக்கெட்டை இழந்து 237 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.  இந்திய ஏ அணி  4-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.

இப்போட்டியில் கெய்க்வாட் 89 பந்தில் 99 ரன்னும் , சுப்மான் கில் 40 பந்தில் 69 ரன்கள் குவித்தனர். இப்போட்டியில் கெய்க்வாட்விற்கு ஆட்டநாயகன் விருது கொடுக்கப்பட்டது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்