சென்னையில் காவல்நிலையத்தின் அருகிலேயே திமுக பிரமுகர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை கீழ்பாக்கம் பகுதியை சேர்ந்த திமுக பிரமுகர் சம்பத்குமார்,நேற்று இரவு அண்ணாநகர் காவல்நிலையம் நோக்கி தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது,எதிரே ஆட்டோவில் வந்த 4 பேர் கொண்ட கும்பல்,காவல்நிலையம் அருகே சம்பத்குமாரை வழிமறித்து சரமாரியாக வெட்டி விட்டு தப்பிச்சென்று விட்டனர். இதனால்,சம்பத் குமார், நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.
சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்த போலீசார் சம்பத்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தப்பி ஓடிய கொலையாளிகள் யார் என்பது குறித்தும், கொலைக்கான காரணம் குறித்தும் போலீசர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொலை செய்யப்பட்ட சம்பத்குமார் தண்ணீர் கேன் வியாபாரம் செய்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.மேலும்,அவர் போலீஸ்க்கு தகவல் கொடுப்பவர் (இன்ஃபார்மர்) ஆகவும் இருந்து வந்துள்ளார்.சில நாட்களுக்கு முன்னர் காஞ்சிபுரத்தைசேர்ந்த பிரபல ரவுடி ஒருவர் பதுங்கியிருந்த இடம் குறித்து காவல்துறைக்கு துப்பு கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து,அந்த ரவுடி கைது கைது செய்யப்பட்டதன் காரணமாகவே, சம்பத் குமார் வெட்டி கொலை செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளன.
இதற்கிடையில்,தன் உயிருக்கு ஆபத்து இருப்பதாக ஏற்கனவே சம்பத் குமார், காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மெல்போர்ன் : ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட…
சென்னை : சென்னை கிண்டியில் அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் நேற்று ஞானசேகரன் என்பவர்…
திருவனந்தபுரம் : கேரளாவில் புகழ்பெற்ற இலக்கிய எழுத்தாளர், திரைப்பட திரைக்கதை எழுத்தாளர், திரைப்பட இயக்குனர் என பன்முகதிறமை கொண்ட எம்.டி.வாசுதேவன்…
சென்னை : அண்மையில் சிங்கப்பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் 2024 போட்டியில் இந்திய இளம் கிராண்ட் மாஸ்டர் குகேஷ்,…
மெல்போர்ன் : ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி…
சென்னை : சென்னை கிண்டியில் செயல்பட்டு வரும் அண்ணா பல்கலைக்கழகத்தில் நேற்று முன்தினம் இரவு மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு…