கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு டெல்லியில் டைப்பாய்டு மற்றும் இன்ஃப்ளூயன்சா பாதிப்பு குறைவு!
முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸ் தொடர்ந்து பல நாடுகளில் தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது. இந்நிலையில், இந்த வைரஸால் பாதிக்கப்பட்ட நாடுகளில் முதலிடத்தில் அமெரிக்கர் உள்ள நிலையில், இரண்டாவது இடத்தில் இந்தியாவும், மூன்றாவது இடத்தில் பிரேசிலும் உள்ளது.
இந்நிலையில், டெல்லியில், கொரோனா வைரஸ் பாதிப்புக்கு மத்தியில், 2020 ஆம் ஆண்டில் டைபாய்டு மற்றும் இன்ஃப்ளூயன்சா நோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக ஆகாஷ் ஹெல்த்கேர் சூப்பர்-ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அவர்கள் கூறுகையில், கடந்த இரண்டு மாதங்களில் டைபாய்டு மற்றும் இன்ஃப்ளூயன்சா இருந்த 50 நோயாளிகளை மட்டுமே இதுவரை பெற்றதாக கூறியுள்ளனர். மேலும், இந்த இரண்டு பருவகால நோய்களிலும் குறைந்தது 50 சதவீதம் குறைவான வழக்குகள் மருத்துவமனைகளில் பதிவாகியுள்ளதாகவும், முந்தைய மழைக்காலங்களில் இந்த எண்ணிக்கை பொதுவாக 100 முதல் 150 வரை சென்றதாகவும், டைபாய்டு தொடர்பான வழக்குகளில் சுமார் 50 சதவீதம் சரிவைக் கொண்டுள்ளதாகவும் கூறியுள்ளனர்.