கொரோனா வைரசின் தாக்கமே குறையவில்லை! மக்களை அடுத்ததாக அச்சுறுத்த வரும் கொடிய நோய்!
கொரோனா வைரசின் தாக்கமே இன்னும் குறையாத நிலையில், மக்களை அடுத்ததாக அச்சுறுத்த வரும் கொடிய நோய்.
முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸ் தொடர்ந்து, பல நாடுகளை குறி வைத்து தாக்கி வருகிறது. இந்த வைரஸ் தாக்கத்தால், இதுவரை உலக அளவில், 6,366,197 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 377,437 பேர் உயிரிழந்துள்ளனர்.
உலக நாடுகள் இந்த வைரஸ் தாக்காதின் அச்சத்தில் இருந்து இன்னும் மீண்டு வராத நிலையில், காங்கோவில் உயிர்கொல்லி நோயான எபோலா நோயின் தாக்கம் மீண்டும் துவங்கியுள்ளது. இந்த நோயினால் இதுவரை அங்கு 4 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 4 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.
மேலும், எபோலா நோயின் தாக்கத்தால், 2018-ம் ஆண்டு பலர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.