கொரோனாவின் தாக்கம் இரத்த வகையை பொறுத்து மாறலாம்! ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்!
கொரோனாவின் தாக்கம் இரத்த வகையை பொறுத்து மாறலாம்.
கொரோனா வைரஸால் இதுவரை உலக அளவில், 7,452,809 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 418,919 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த வைரஸ் பாதிப்பு அதிகமாக உள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அதனை தொடர்ந்து, பிரேசில், ரஷ்யா, இங்கிலாந்து போன்ற நாடுகள் உள்ளது.
இந்நிலையில், இங்கிலாந்தில் நடைபெற்று வரும் ஆய்வு ஒன்றில், முதல் கட்டமாக, கொரோனா வைரஸ் தாக்கம் குறிப்பிட்ட இரத்த வகைகளில் அதிகமாகவும், வேறு சில வகையில் குறைவாகவும் உள்ளதாக தெரிய வந்துள்ளது.
இந்நிலையில், இந்த ஆய்வின் முதல்கட்ட முடிவுகள் மட்டுமே வெளியாகியுள்ள நிலையில், இன்னும் இந்த ஆய்வு நடைபெற்று வருவதால், முழுமையான முடிவுகள் இன்னும் வெளியாகவில்லை. முதல் கட்ட ஆய்வின்படி, ஏ, ஓ, பி ஆகிய இரத்த வகைகளுக்கு கொரோனா தாக்கம் மாறுபட்டு காணப்படுகிறது.
குறிப்பாக ஓ பிரிவு இராத வகையினருக்கு மற்ற பிரிவினரை விட, 9 முதல் 18% வரை கொரோனா தாக்குதல் குறைவாக இருந்துள்ளது. இந்த முடிவுகள் வயது, பாலினம் மற்றும் இருப்பிடத்தை பொறுத்து மாறுபடுகிறது. குறிப்பாக சீனாவில் நடைபெற்ற சோதனையில்,ஆராய்வு செய்ததில் ஓ பிரிவு இரத்த வகையை சேர்ந்தவர்களுக்கு, மாற்றங் பிரிவு இரத்த வகையை விட குறைந்த அளவே பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த ஆய்வில் அனைத்து வகை இரத்த பிரிவு முடிவுகளும் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த ஆய்வு மேலும் நடைபெறவுள்ளதால், முடிவுகளில் மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.