உலகம் முழுவதும் கொரோனாவின் தாக்கம் மற்றும் உயிரிழப்பு!

உலகம் முழுவதும் கொரோனா 60லட்சத்தை கடந்து நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது.
இன்னும் ஓயாத கொரோனா அலையால் மக்கள் செய்வதறியாது திகைத்து நிற்கின்றனர். இதுவரை கொரோனாவால் உலகம் முழுவதும் 6,267,338 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 373,961 பேர் உயிரிழந்துள்ளனர்.
நேற்று ஒரே நாளில் 108,767 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 3191 பேர் புதிதாக உயிரிழந்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்களில் 2,843,998 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ள நிலையில், 3,041,554 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.