மனைவிக்கு வீட்டிலேயே பிரசவம் பார்த்த கணவர் – கர்ப்பிணிப் பெண் பரிதாபமாக உயிரிழப்பு…!
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சப்பள்ளி பகுதியை சேர்ந்தஹவர் மாதேஷ். இவரது மனைவி கர்ப்பமாக இருந்துள்ளார். இந்த நிலையில், அவரை கிராம செவிலியர்கள் அடிக்கடி வந்து பரிசோதித்துள்ளனர். இந்த நிலையில், மாதேஷ் மற்றும் அவரது மனைவி அந்த ஊரை விட்டு வெளியேறி, மனைவியின் ஊரில் வந்து தங்கி உள்ளனர்.
இந்த நிலையில், மாதேஷின் மனைவி லோகநாயகிக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. அப்போது மாதேஷ், யூடியூப் பார்த்து லோகநாயகிக்கு பிரசவம் பார்த்துள்ளார். மாதேஷின் இந்த செயலால், லோகநாயகி உயிரிழந்துள்ளார்.
இயற்கைவாழ்வு முறையை பின்பற்றும் மாதேஷ் என்பவற்றின் செயலால் அவரது மனைவி லோகநாயகி உயிரிழந்த நிலையில், இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.