அமெரிக்காவில் தனது அறுவை சிகிச்சையின் போது அழுததற்காக பணம் வசூலித்ததாக ஒரு பெண் கூறியுள்ளார்.
அறுவை சிகிச்சை சிறியதாக இருந்தாலும், பெரியதாக இருந்தாலும் நமக்கு முதலில் மனதில் தோன்றுவது பயம். அதுதான் மனிதனின் இயல்பு. அந்த பயத்தால் ஏற்படும் மன அழுத்தத்தால் நாம் கண்களில் கண்ணீர் நம்மை அறியாமல் வரும், சிலர் சத்தமாக அழுவார்கள், சிலர் மனதில் வைத்து கொள்வார்கள். இந்த அனுபவம் அறுவைசிகிச்சைக்கு முன் கிட்டத்தட்ட அனைவருக்கும் நடந்து இருக்கும்.
அபப்டி, அமெரிக்காவில் கூட ஒரு பெண் அறுவை சிகிச்சைக்கு முன் உணர்ச்சிவசப்பட்டு பயத்தில் அழுதுள்ளார். இதனால், மருத்துவமனை அந்த பெண்ணுக்கு எதிர்பாராத அதிர்ச்சியை கொடுத்தது. Midge என்ற பெண் மருவை அகற்ற மருத்துவமனைக்கு சென்றார். சிறிய அறுவை சிகிச்சை மூலம் அவற்றை அகற்ற மருத்துவர்கள் தயாராக இருந்தபோது அந்த நேரத்தில் மிட்ஜ் பயத்தில் அழுதுள்ளார்.
பின்னர், அவருக்கு ஆறுதல் கூறி மருவை அகற்றினர். டிஸ்சார்ஜ் செய்யப்படுவதற்கு முன் அந்த பெண்ணிடம் பில் கொடுக்கப்பட்டது. அதில், மொத்தம் 223 டாலர் கட்டணம் வசூலிக்கப்பட்டது. அதில் 11 டாலர் அவள் அழுததற்காக கட்டணம் வசூலிக்கப்பட்டது. அதில், இரண்டு டாலர் தள்ளுபடி வழங்கியதாகவும், அந்த பில் “ப்ரீஃப் எமோஷன்” என்ற பெயரில் வசூலிக்கப்படுவதாகக் இருந்தது. அதைப் பார்த்த மிட்ஜ் அதிர்ச்சியடைந்தார்.
முதன்முறையாக இதேபோன்ற பில்லை பார்த்ததாகவும், நான் இதை உலகிற்கு சொல்ல விரும்பினேன் என கூறி அந்த பில்லை தனது ட்விட்டர் கணக்கில் அப்பெண் வெளியிட்டார். இந்த பில்லை பார்த்த பல நெட்டிசன்கள் அதிர்ச்சியடைந்தனர். சில நிமிடங்களில் அவரது பதிவு வைரலானது.
பத்து மில்லியனுக்கும் அதிகமான லைக்குகள் இருந்தன. எட்டாயிரம் ரீட்வீட்கள் செய்யப்பட்டன. இது அமெரிக்க சுகாதாரப் பாதுகாப்பு அமைப்பின் நிலை என்று சிலர் கோபமாக கருத்து தெரிவித்துள்ளனர்.
சென்னை : இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பெரிய நடிகர்களுடைய படங்கள் வெளியாகவில்லை என்றாலும், தீபாவளியைத் தரமாகவும் குடும்பத்துடனும்…
பஞ்சாப் : ஆஸ்திரேலியா அணியின் கிரிக்கெட் ஜாம்பவான் கிளன் மேக்ஸ்வெல் நடந்து முடிந்த 2017 ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்கு…
சென்னை : நாளை தீபாவளி பண்டிகையை முன்னிட்டு என்ன படம் பார்க்கலாம் என்று தேடிக்கொண்டு இருப்பவர்களுக்கு ஒரு விருந்தாக ரப்பர்…
சென்னை : இன்று முத்துராமலிங்க தேவரின் 117-வது ஜெயந்தியை முன்னிட்டு, அரசியல் தலைவர்கள் பலரும் பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவர்…
சென்னை : மிகவும் எதிர்பார்க்கப்பட்டநயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதியரின் திருமண ஆவணப்படமான ஆவணப்படமான "நயன்தாரா - பியோண்ட் தி…
அயோத்தி : தீபாவளியை முன்னிட்டு பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் செய்த காரியம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அயோத்தி ராமர்…