ஹாங்காங் விவகாரம்.! அமெரிக்கா விசா கட்டுப்பாடு.! சீனா கண்டனம் .!
ஹாங்காங் சீனாவிடன் இருந்து சுதந்திரம் பெற கடந்த ஆண்டு முதல் போராட்டங்களை நடத்தி வருகின்றது. இந்த போராட்டத்தின் போது ஹாங்காங்கில் உள்ள சீன கொடிகள் , அலுவலங்கள் சூரையாடப்பட்டன. இதனால், கோபமடைந்த சீனா தேசிய பாதுகாப்புச் சட்ட மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தது. இதற்கு நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த மசோதா இந்த ஆண்டுக்குள் நிறைவேற்றப்படும்.
அப்படி, இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால் ஹாங்காங்கின் சிறப்பு அதிகாரங்கள் ரத்து செய்யப்படும். சீனாவில் இந்த நடவடிக்கைக்கு அமெரிக்கா, கனடா போன்ற நாடுகள்
கண்டனம் தெரிவித்து வருகிறது. இந்த, புதிய பாதுகாப்புச் சட்டத்தால் ஹாங்காங் மக்களின் சுதந்திரம் பறிக்கப்படுவதோடு, அங்கு இருக்கும் அமெரிக்க நிறுவனங்கள் பாதிக்கப்படும் என கூறப்படுகிறது.
இதனால், இந்த மசோதவை நடைமுறைப்படுத்த அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்நிலையில், ஹாங்காங்கில் பாதுகாப்புச் சட்டத்தை நிறைவேற்றினால் சீன அதிகாரிகளுக்கு விசா கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர்
தெரிவித்துள்ளார்.
இந்த கட்டுப்பாடுகளுக்கு வாஷிங்டனில் உள்ள சீன தூதரகம் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும், சீனாவின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவதை நிறுத்த கேட்டுக்கொள்கிறோம் என தெரிவித்துள்ளது.