கோப்ரா படத்திற்கான படப்பிடிப்பை முடித்த ஹீரோயின்.!
கோப்ரா படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ள ஸ்ரீநிதிஷெட்டி தனது காட்சிகளுக்கான படப்பிடிப்பை முடித்துள்ளார் .
நடிகர் விக்ரம் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் கோப்ரா.ஸ்ரீநிதிஷெட்டி, இர்பான் பதான் உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்தில் விக்ரம் பல வேடங்களில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது.இந்த படத்தை இமைக்கா நொடிகள் என்ற வெற்றி படத்தை இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்க 7 ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் தயாரிக்கிறது.ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் வெளியான அனைத்து பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.
தமிழ், தெலுங்கு, மற்றும் இந்தியில் உருவாகும் கோப்ரா படத்தின் படப்பிடிப்பு கொரோனா பரவல் காரணமாக தள்ளி வைக்கப்பட்டிருந்த நிலையில் சமீபத்தில் மீண்டும் படப்பிடிப்பினை தொடங்கியது .இந்த நிலையில் கோப்ரா படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ள கேஜிஎஃப் பிரபலமான ஸ்ரீநிதிஷெட்டி தனது காட்சிகளுக்கான படப்பிடிப்பை முடித்துள்ளார் .இதனை கோப்ரா படக்குழுவினர் கேக் வெட்டிக் கொண்டாடியுள்ளனர் . அந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.
It’s a wrap for our #BhavanaMenon @SrinidhiShetty7 ???????? Thanks a million for your extended support throughout the completion of your shoot ????????
– Team #Cobra pic.twitter.com/GwuaRssTt8— Seven Screen Studio (@7screenstudio) February 7, 2021