இரண்டு முறை விண்வெளியில் பயணம் செய்த இந்திய வம்சாவளியை சேர்ந்த வீர பெண்மணி !
சுனிதா வில்லியம்ஸ் 1965 ஆம் ஆண்டு இந்தியாவில் உள்ள குஜராத் மாநிலத்தை சேர்ந்த தீபக் , இஸ்சோவேனியாவை சேர்ந்த போனி பாண்ட்யா தம்பதிக்கு மகளாக பிறந்தார்.
இவர் 1983 ஆம் ஆண்டு மாசச்சூசெட்டில் உள்ள நீதாம் உயர்நிலை பள்ளியில் பள்ளி படிப்பை முடித்தார்.இந்நிலையில் 1987 ஆம் ஆண்டு அமெரிக்க கடற்படையில் அகாடமியில் அறிவியல் துறையில் இளங்கலை பட்டம் பெற்றார்.
அதற்கு பிறகு இவர் 1995 ஆம் ஆண்டு ஃபுளோரிடா தொழில் நுட்பக்கழகத்தில் அவரது முதுகலை படிப்பை முடித்தார். அதற்கு பிறகு இவர் நாசாவால் தேர்ந்தெடுக்க பட்டு 1998 ஆம் ஆண்டு அவரது பயிற்சியை ஆரம்பித்தார்.
அதன் பிறகு 2006 ஆம் ஆண்டு டிசம்பர் 9 ஆம் தேதி சுனிதா வில்லியம்ஸ் முதல் முறையாக விண்வெளிக்கு சென்றார். அவர் 29 மணி நேரம் 17 நிமிடங்கள் நடை பயணம் மேற்கொண்டு சாதனை படைத்தார். இந்நிலையில் அவர் ஜூன் 22 2007 வரை விண்வெளியில் இருந்தார்.
அதற்கு பிறகு அவர் இரண்டாவது முறையாக 2012 ஆம் ஆண்டு ஜுலை 14 ந் தேதி விண்வெளிக்கு பயணம் மேற்கொண்டார். இவர் விண்வெளியில் 50 மணிநேரம் 40 நிமிடங்கள் நடந்து சாதனை படைத்தார். இவர் விண்வெளியில் இருக்கும் போதே மாரத்தான் ஓடுவது போன்ற பல முயற்சிகளையும் மேற்கொண்டு பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார்.
இவர் அதற்கு பிறகு நவம்பர் 18 ந் தேதி 2012 ஆம் ஆண்டு 127 நாட்கள் களைத்து மீண்டும் பூமிக்கு திரும்பினார். சாதனை பெண்ணாக இருந்து வரும் இவர் பெண்கள் சமுதாயத்திற்கு எடுத்துக்காட்டாக இருந்து வருகிறார். மூன்றாவது முறையாகவும் விண்வெளிக்கு செல்ல இருக்கிறாராம்.அதாவது நாசா அடுத்ததாக வணிக ரீதியான விண்கலத்தை விண்வெளியில் அனுப்ப இருக்கிறதாம்.அந்த வணிக ரீதியான விண்கலத்ததில் செல்வோரின் பட்டியலில் சுனிதா வில்லியம்ஸின் பெயரும் இடம் பெற்றுள்ளதாம்.