இளைஞர்களின் கொண்டாட்டம், காதலின் அழகு, காதலின் வலி, தெறிக்கும் பிண்ணனி இசை என்று யார் என்ன கேட்டாலும் தனது இசையை அள்ளி அள்ளி தரும் இளம் இசையுலக ஜாம்பவான் யுவன் சங்கர் ராஜாவுக்கு இன்று 42வது பிறந்தநாள்.
தமிழ் சினிமாவில் எத்தனை இசையமைப்பாளர்கள் உருவெடுத்தாலும், தமிழ் இளைஞர்கள் மத்தியில் யுவன் ஏற்படுத்திய தாக்கத்தை அவர்களால் தொட கூட முடியாது என்பதே உண்மை. காரணம், மற்ற இசையமைப்பாளர்கள் புது புது இசைக்கருவிகளை அறிமுகப்படுத்தி, புது புது இசை சப்தங்களை ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தியபோது, யுவன் மட்டுமே இன்றுவரை அழகான பாடல் வரிகளை உணர்வுபூர்வமாக ரசிகர்களின் செவிக்கு தனது இசையை ஒரு கருவியாக்கி கடத்தி வருகிறார்.
யுவனை ஒரு இசை போதை வியாபாரி என ரசிகர்கள் செல்லமாக கூறுவதுண்டு. ஆம், அவர் அதைத்தான் செய்கிறார். காதலின் மகிழ்ச்சியை காட்டிலும் காதலின் வலியை இவரை விட ஆழமாகவும், அழகான வரிகளோடும் இசையோடு தாலாட்டியவர் இன்று வரை யாரும் இல்லை. இவரின் காதல் வலி மிகுந்த பாடல்களை கேட்டால், காதலிக்காதவர்கள் கூட எதோ பலவருடம் காதலித்து தோற்றுபோனவர்கள் போல தன்னை மறந்து இதயத்தில் கண்ணீர் வரவழைத்து விடுவார். அதனால் தானோ என்னமோ அவர் இசை போதை வியாபாரியாக இருக்கிறார்.
காதல் மட்டுமா.? பெரிய ஹீரோவோ சிறிய ஹீரோவோ அல்லது வளர விரும்பும் ஹீரோவா ஹீரோயிசம் காட்ட வேண்டுமா? யுவனிடம் செல்லுங்கள் ஹீரோவுக்கு தீம் மியூசிக் வேண்டும் என கூறுங்கள் போதும். தெறிக்கும் பின்னணி இசையில் திரையில் யார் இருக்கிறார் என்றுகூட பாராமல் ரசிகர்கள் ஆரவாரம் செய்வார்கள். அந்தளவிற்கு தீம் மியூஸிக்கில் தெறிக்கவிடுவார். தமிழ் சினிமாவில் தற்போது வளர்ந்துள்ள பல ஹீரோக்களுக்கு முதல் பட முகவரியாய் இருந்தவரே யுவன் தான். அதனை அவரால் வளர்ந்த பல ஹீரோக்கள் பல மேடைகளில் கூறியிருக்கின்றனர்.
ஒரு ரசிகர் இவர் இசையமைத்து பாடிஇருந்த ‘ ஒரு நாளில் வாழ்க்கை எங்கும் ஓடி போகலாகாது’ எனும் பாடலை கேட்டு பின் தன் தற்கொலை எண்ணத்தையே மாற்றிவிட்டேன். என கூறும் அளவிற்கு யுவனுக்கும் அவரது ரசிகருக்குமான பந்தம் அளப்பரியது. அவரது பாடல் இளைஞர்களை கொண்டாட வைக்கும், காதலிக்க வைக்கும், காதல் தோல்விக்கு மருந்தாகும், வாழ்வில் உத்வேகம் அளிக்கும், தீம் மியூசிக்கள் போனின் ரிங்டோனாக மாறி போகும் அனைத்தும் இருக்கும். இன்னுமும் இருக்கும்.
நடிகர் தனுஷ் ஒரு மேடையில் கூறியது போல, தமிழ் சினிமாவில் எத்தனை இளம் இசையமைப்பாளர் வந்தாலும் சரி இந்த பக்கம் யுவனின் பெயர் என்றென்றும் நிலைத்து நிற்கத்தான் செய்கிறது. நிற்கத்தான் செய்யும். யுவனுக்கு வேண்டுமானால் 42 வயது நிறைவடைந்திருக்கலாம். ஆனால் அவரது இசைக்கு என்றுமே 16தான். இளம் இசைக்கு சொந்தக்காரர். இளைஞர்களின் போதை வியாபாரி, பின்னணி இசையின் ஜாம்பவான் யுவனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். என்றும் யுவன் – U1 – நெம்பர் 1 தான்..
தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…
டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…