அஜித்தின் 61-வது திரைப்படத்தில் ஹீரோவும் அவர்தான், வில்லனும் அவர்தான் என வதந்தி செய்தி பரப்பப்பட்டு வருகிறது.
இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் நடிப்பில் கடந்த 24-ஆம் தேதி வெளியான திரைப்படம் வலிமை. இந்த படத்தை தயாரிப்பாளர் போனிகபூர் தயாரித்துள்ளார். தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய 4 மொழிகளில் வெளியான இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று நல்ல வசூல் சாதனை செய்து வருகிறது.
இந்த திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் அஜித் அடுத்ததாக ஹெச்.வினோத் இயக்கத்தில் தனது 61-வது படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு மார்ச் மாதம் தொடங்கும் எனவும், படப்பிடிப்புக்கான செட் அமைக்கும் பணி ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில், இயக்குனர் ஹெச்.வினோத்திடம் ரசிகர் ஒருவர் தல 61 பற்றிய அப்டேட் கேட்டதற்கு அவர், ” ஹீரோவும் அவர்தான், வில்லனும் அவர்தான் ஆனால் இரண்டு கதாபாத்திரங்கள் கிடையாது” என்று கூறிய வதந்தி செய்தி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
முன்னதாக அஜித் அவரது 61-வது திரைப்படத்தில் நெகட்டிவ் ரோலில் நடிப்பார் என கூறப்பட்டிருந்தது. நெகட்டிவிற்கு ஏற்றது போல் அஜித்தின் 61- வது படத்திற்கான போஸ்டரும் வெளியிடப்பட்டது. போஸ்டரையும், வினோத் கூறியதாக பரவி வரும் வதந்தி செய்தியை வைத்து உண்மை என ரசிகர்கள் கூறிவருகிறார்கள்.
சென்னை : பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்துள்ள டிராகன் திரைப்படம் வரும் பிப்ரவரி 14-ஆம் தேதி வெளியாகும் என முன்னதாக படக்குழு…
சென்னை : தமிழக கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…
சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட் ஜார்ஜ்…
டெல்லி : சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி இன்று அறிவிக்கப்பட்டது. இதற்காக இன்று மும்பையில் பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றும்…
சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட்…
டெல்லி : வரும் பிப்ரவரி 5ஆம் தேதி டெல்லி மாநிலத்தில் உள்ள 70 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக பொதுத்தேர்தல்…