நடிகர் விஜய் நடிப்பில் இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் பீஸ்ட். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடித்துள்ளார். சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார்.
இந்த திரைப்படம் வரும் ஏப்ரல் மாதம் வெளியாகவுள்ளது. இந்த நிலையில் சமீபத்தில் பேட்டியளித்த நடிகை பூஜா ஹெக்டே பீஸ்ட் படம் குறித்தும் நடிகர் விஜய் குறித்தும் சில விஷயங்களை பகிர்ந்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியது, “பீஸ்ட் திரைப்படம்..சிவகார்த்திகேயன் சார் நடிப்பில் வெளியான டாக்டர் படம் போல இருக்கும்..விஜய் சார் மிகவும் அருமையாக நடித்துள்ளார். விஜய் சார் மிகவும் அன்பானவர், நான் பணியாற்றியதில் மிகவும் கடினமாக உழைக்கும் நடிகர் என்று நான் நினைக்கிறேன். 64 படங்களில் நடித்தது போல இல்லாமல் மிகவும் எளிமையாக இருந்தார்.. இது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. ” என கூறிஉள்ளார்.
மேலும் பீஸ்ட் படத்தின் இசைவெளியீட்டு விழா நடைபெறாது என தகவல்கள் பரவி வருகிறது. ஏனெனில் பிகில், மாஸ்டர் இசைவெளியீட்டு நிகழ்ச்சியின் போது, ரசிகர்கள் கூட்டம் அதிகமானதால், கூட்டத்தை கலைக்க தடியடி நடத்தப்பட்டது. மீண்டும் அது போன்ற சம்பவம் நடக்காமல் இருப்பதற்காகவும், கொரோனா பரவல் ஏதும் மீண்டும் வந்துவிட கூடாது என்பதாலும், இசை வெளியீட்டு விழா நடத்தப்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இதுகுறித்து எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவை நிகழ்வில் கலந்து கொள்ள வந்த அதிமுக எம்எல்ஏக்கள், ' யார் அந்த தியாகி?'…
சென்னை : நடப்பு ஐபிஎல் சீசனில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 போட்டிகளில் விளையாடி…
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் மானிய கோரிக்கைகள் தொடர்பாக கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இன்று வீட்டுவசதித்துறை மானிய கோரிக்கைகள் நடைபெற்று…
சென்னை : தமிழ்நாடு பாஜக தலைவராக தற்போது அண்ணாமலை பொறுப்பில் இருக்கிறார். இவர் விரைவில் மாற்றம் செய்யப்படுகிறார் என்றும், விரைவில்…
உத்தரபிரதேசம் : நேற்று, நாடு முழுவதும் இந்து பண்டிகையான ராம நவமி கொண்டாடப்பட்டது. இந்த நிலையில், உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ்…
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் மானிய கோரிக்கைகள் தொடர்பாக கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இன்று வீட்டுவசதித்துறை மானிய கோரிக்கைகள் நடைபெற்று…