மாப்பிள்ளை அழகாக இருந்ததால் மகளின் திருமணத்தை நிறுத்திய கோடீஸ்வர தந்தை !!!!
- தனது மகளை திருமணம் செய்து கொள்பவருக்கு 240,000 பவுண்டுகள் வரதட்சணையாக தருவதாக கூறி இருந்தார்.
- இந்த போடியில் கலந்து கொண்ட ப்ரீமியசபோன் 28 வயது உடைய என்ற இளைஞரை கர்சீதா தேர்வு செய்தார்
தென் தாய்லாந்திலுள்ள சும்ஃபோன் மாகாணத்தில் வளமான துருவ பழம் பண்ணைக்கு சொந்தமானவர் அர்னோன் ரோடொங் (58).இவரின் மகள் கர்சீதா (26). தனது மகள் இதுவரை திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பது பெரும் வருத்தத்தை எற்படுத்தியது.
இந்நிலையில் தனது மகளை திருமணம் செய்து கொள்பவருக்கு 240,000 பவுண்டுகள் வரதட்சணையாக தருவதாக கூறி இருந்தார். மேலும் மூன்று நிபந்தனைகளையும் கூறியிருந்தார்.
இந்த விளம்பரத்தை பார்த்த தாய்லாந்து இளைஞர்கள் பலர் போட்டியில் கலந்து கொண்டனர். இந்த போடியில் கலந்து கொண்ட 28 வயது உடைய இளைஞரை கர்சீதா தேர்வு செய்தார்.
அர்னோன் ரோடொங் மகள் கர்சீதா தேர்வு செய்த மாப்பிள்ளை மிக அழகாக இருப்பதால் பிற்காலத்தில் ஒரு நாள் தான் மகளைவிட்டு செல்ல வாய்ப்பு இருப்பதாகவும் ,அதனால் இந்த திருமணத்திற்கு அர்னோன் ரோடொங் மறுப்பு தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் மாப்பிள்ளை தேடும் போட்டியை கைவிட்டு விட்டார் அர்னோன் ரோடொங்.
எதிர்காலத்தில் தனது மகளை திருமணம் செய்பவருக்கு தாம் அறிவித்த தொகையை தருவதாகவும்.
மேலும் தனக்கு வரும் மாப்பிள்ளைக்கு சரளமாக ஆங்கிலம் மற்றும் சீன மொழியில் பேசவும் ,எழுதவும் தெரியவேண்டும்.
மேலும் தனது தொழிலை வழி நடத்தும் திறமை தான் மாப்பிள்ளையிடம் இருக்க வேண்டும்.
தனது மகளின் திருமணம் முடிந்த பிறகு தனது மொத்த சொத்துக்களையும் மகள் , மருமகனிடம் ஒப்படைப்பதாகவும் அர்னோன் ரோடொங் கூறினார்.