மணக்கும் மல்லிகையின் மகத்துவமான நன்மைகள்….!!!

Default Image

மனம் மயக்கும் மல்லிகைப்பூ தலையில் வைப்பதற்கு மட்டும் தான் பயன்படுகிறது என்று பலரும் நினைக்கின்றனர்.நாம் இதுவரை அறிந்திராத பல மருத்துவ குணங்களை கொண்டது மல்லிகைப்பூ. இந்த பூவில் நமது உடலில் ஏற்படக்கூடிய பலவகை நோய்களை குணப்படுத்தக்கூடிய ஆற்றல் இதில் உள்ளது.

மருத்துவ குணங்கள் :
சிறுநீரக கற்கள் :
மல்லிகை பூவை நிழலில் காயவைத்து, அதனை எடுத்து பொடியாக்கி, கொதிக்க வைத்த நீரில் கலந்து குடித்து வந்தால், சிறுநீரக கற்கள் தானாக கரைந்து விடும்.
கண்களில் வளரும் சதை வளர்ச்சியை கட்டுப்படுத்த :

மல்லிகை பூவை நீரில் போட்டு கொதிக்க வைத்து, பின் அதில் பனங்கற்கண்டை கலந்து குடித்து வந்தால் கண்களில் வளரும் சதை வளர்ச்சியை கட்டுப்படுத்துகிறது.
வலி நீக்க :
மல்லிகை பூவை அரைத்து, உடலில் வலி மற்றும் வீக்கம் உள்ள இடங்களில் பத்து போட்டு வந்தால் வலி மற்றும் வீக்கம் குறையும்.
சொறி சிரங்கு :

மல்லிகை பூவை அரைத்து சொறி சிரங்கு உள்ள இடத்தில் போட்டு வந்தால் சொறி சிரங்கு குணமாகும்.
குடற்புழு :
குடலில் காணப்படும் புழுக்களை அழைக்க மல்லிகை பூவை நீரில் கொதிக்க வைத்து, அந்த நீரை வடிகட்டி குடித்து வந்தால், குடற்புழு அழிந்து விடும்.
நோய் எதிர்ப்பு சக்தி :

மல்லிகை பூவை நீரில் கொதிக்க வைத்து அந்த நீரை குடித்து வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும்,

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்