தமிழில் ரீமேக்காகும் ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’.! இயக்குனர் யார் தெரியுமா.?
மலையாளத்தில் மெகா ஹிட்டான தி கிரேட் இந்தியன் கிச்சன் படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை கண்ணன் வாங்கி இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இயக்குனர் மணிரத்னத்தின் உதவி இயக்குனராக பணியாற்றி வந்த கண்ணன் ஜெயம் கொண்டான் எனும் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார்.அதன் பின் கண்டேன் காதலை ,சேட்டை ,வந்தான் வென்றான் உள்ளிட்ட படங்களை இயக்கிய இவர் கடைசியாக சந்தானத்தின் பிஸ்கோத் படத்தினை இயக்கியிருந்தார்.தற்போது அதர்வாவின் தள்ளி போகாதே படத்தினை இயக்கி வரும் இவர் அடுத்ததாக மலையாள மெகா ஹிட் படத்தினை இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சமீபத்தில் சுராஜ் வெஞ்சரமூடு மற்றும் நிமிஷா சஜயன் நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வெற்றியை பெற்ற ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ படத்தினை தமிழில் ரீமேக் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.அதன் ரீமேக் உரிமையை கண்ணன் வாங்கி தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒரே நேரத்தில் இயக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.விரைவில் இதனை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.