4000 வருடத்துக்கு முன் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தவாறு கல்லறை ஒரு காதல் ஜோடி!
கஜகஸ்தான் நாட்டின் காரகண்டா மாகாணத்தில் தொல்லியல் ஆய்வாளர்கள் ஆராய்ச்சி செய்து வருகின்றனர்.இவர்கள் அப்பகுதியில் ஒரு கல்லறையை தோண்டினர்.அதில் இரண்டு எலும்பு கூடுகள் இருந்தது.
அந்த இரண்டு எலும்பு கூடுகளும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தவாறு புதைக்கப்பட்டு இருந்ததை பார்த்த ஆராய்ச்சியாளர்களுக்கு வியப்பை ஏற்படுத்தியது.இரண்டு எலும்பு கூடுகளுக்கு அருகில் ஏராளமான தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் இருந்தது.மேலும் ஒரு எலும்பு கூடு அருகில் வளையல்கள் தங்க மோதிரங்கள் இருந்தது.
நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன் இறந்த 16,17 வயது உடையவர்களின் கல்லறை என்றும் இவர்கள் காதலர்களாக இருந்து இருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.இவர்கள் இருவரும் உயர் குடியை சேந்தவர்களாக இருக்கலாம் எனவும் கூறினர்.