பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்துவதால் அரசுக்கு அதிக செலவில்லை- ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் மாயவன்
பழைய ஓய்வூதியத்தை தருவதாகக் கூறினால் உடனே பணிக்கு திரும்பத் தயார் என்று ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் மாயவன் தெரிவித்துள்ளார்.மேலும் பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்துவதால் அரசுக்கு அதிக செலவில்லை. நாங்கள் புதிய கோரிக்கை எதையும் வைக்கவில்லை. ஏற்கனவே நடைமுறையில் இருந்ததைதான் கேட்கிறோம்.அதேபோல் அமைச்சர் ஜெயக்குமார் கூறுவதை ஏற்க முடியாது என்றும் ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் மாயவன் தெரிவித்துள்ளார்.