கோத்தபய ராஜபக்சே அரசு இலங்கை நிதி நெருக்கடி பற்றிய பல உண்மைகளை மூடி மறைந்துள்ளது. -ரணில் விக்ரமசிங்கே.
இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டவுடன், மக்கள் போராட்டம் கட்டுக்கடங்காமல் அதிகமானது. இதனால், அங்கு பெரும் அரசியல் நகர்வுகள் நடைபெற்றது.
அப்போது, அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவியை ராஜினாமா செய்யாமல் இலங்கையை விட்டு வெளியேறி, பின்னர் ராஜினாமா கடிதம் அனுப்பி ஏற்றுக்கொள்ளப்பட்டது. தற்போது தற்காலிக அதிபராக ரணில் விக்ரமசிங்கே நியமிக்கப்பட்டுள்ளார்.
அவர் பொறுப்பேற்றதும், குறிப்பிட்ட விவசாய கடன் ரத்து, அவசரநிலை பிரகடனம் என அடுத்தடுத்த நகர்வுகளை மேற்கொண்டு வருகிறார்.
அண்மையில் அவர் கூறுகையில், ‘ கோத்தபய ராஜபக்சே அரசு இலங்கை நிதி நெருக்கடி பற்றிய பல உண்மைகளை மூடி மறைந்துள்ளது. இலங்கை திவால் நிலைமை பற்றி அவர்கள் கூறவில்லை. 2023 இறுதிக்குள் இலங்கை பொருளாதார அஸ்திவாரம் பலமாக்கப்படும். அதற்கடுத்த ஆண்டுகளில் அதனை உறுதிப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.
இந்தியா இதுவரை இலங்கைக்கு 4 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு நிதியுதவி செய்துள்ளது. இது இலங்கை பொருளாதாரத்தை மீட்க பெரிதும் உதவும்.
சமூக பாதுகாப்பு, சட்ட ஒழுங்கு சீர்படுத்துதல், அத்யாவசிய பொருட்கள், சேவைகளை ஒழுங்குபடுத்துதால் போன்ற நடவடிக்கை மிக இலங்கைக்கு தற்போது முக்கியமான ஒன்றாகும். என இலங்கை தற்காலிக அதிபர் ரணில் விக்ரமசிங்கே தெரிவித்துள்ளார்.
சென்னை : இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் நல்லகண்ணு அவர்களின் நூற்றாண்டு பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது. சென்னையில்…
சென்னை : இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு அவர்களுக்கு நூற்றாண்டு பிறந்தநாள் விழா நிகழ்வு சென்னையில்…
மெல்போர்ன் : ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட…
சென்னை : சென்னை கிண்டியில் அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் நேற்று ஞானசேகரன் என்பவர்…
திருவனந்தபுரம் : கேரளாவில் புகழ்பெற்ற இலக்கிய எழுத்தாளர், திரைப்பட திரைக்கதை எழுத்தாளர், திரைப்பட இயக்குனர் என பன்முகதிறமை கொண்ட எம்.டி.வாசுதேவன்…
சென்னை : அண்மையில் சிங்கப்பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் 2024 போட்டியில் இந்திய இளம் கிராண்ட் மாஸ்டர் குகேஷ்,…