கரடியுடன் கடலுக்கு மீன் பிடிக்க சென்ற பெண்…! இணையத்தில் வைரலாகும் புகைப்படம்…!
ரஷ்யாவின் தெற்கு சைபீரியாவில் காணப்படும் நோவோசிபிர்ஸ்கில் உள்ள வன ஏரியில், ஆர்ச்சி கரடி மற்றும் வெரோனிகா டிச்சா இருவரும் மீன் பிடிக்க சென்றுள்ளனர்.
பொதுவாக கரடிகள் என்றாலே மனிதர்கள் பயப்படுவதுண்டு. ஆனால், ரஷ்யாவின் தெற்கு சைபீரியாவில் காணப்படும் நோவோசிபிர்ஸ்கில் உள்ள வன ஏரியில், ஆர்ச்சி கரடி மற்றும் வெரோனிகா டிச்சா இருவரும் மீன் பிடிக்க சென்றுள்ளனர். அந்த பெண் தனது கரங்களில் மீன் பிடி தூண்டிலைவைத்திருப்பது போல, அந்த கரடியின் கரங்களிலும் மீன்பிடி தூண்டில் வைத்துள்ளது.
வெரோனிகா இந்த கரடியை இரண்டு ஆண்டுகளுக்கு முன் ஒரு பூங்காவில் இருந்து மீட்டு, அந்த கரடியை ஒரு செல்ல பிள்ளையாக வளர்த்து வருகிறார். இரண்டு மனிதர்கள் நெருங்கிய நண்பர்களாக இருந்தால் எப்படி பழகுவார்களோ, அதுபோலவே இருவரும் பழகி வருகின்றனர்.
இந்த ஆர்ச்சி கரடி குறித்து வெரோனிகா கூறுகையில், அந்த கரடியை குடும்பத்தில் ஒரு நபராக தான் பார்ப்பதாகவும், நாங்கள் இருவரும் உணவை பகிர்ந்து கொள்வோம். பயப்படும் போது, என் கைகளில் தூங்கும். பயப்படும் போது என் பின்னால் ஒழிந்து கொள்ளும் என தெரிவித்துள்ளார்.
மேலும், ஆர்ச்சி தினமும் எங்களுடன் நேரத்தை செலவிடுகிறது. அது தண்ணீரை மிகவும் நேசிக்கும். நான் அவரை புதிய இடங்களுக்கு அழைத்துச் செல்லும்போது அவர் அதை மிகவும் நேசிக்கிறார் என தெரிவித்துள்ளார். மேலும், கரடி அந்த பெண்ணுடன் மீன் பிடிக்கும் புகைபபடங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.