சிகாகோவில் தனிமையில் வசித்து வந்தவரின் பிறந்தநாளுக்கு திடீரென்று கேக் கொடுத்து அசத்திய சிறுமியின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
அமெரிக்காவில் சிகாகோ நகரில் அடுக்குமாடி குடியிருப்புகளில் தான்யா என்ற சிறுமி தனது குடும்பத்தாருடன் வசித்து வருகிறார். சமீபத்தில் தான்யாவின் பிறந்தநாளை கொண்டாடிய சிறுமி, அனைவருக்கும் இனிப்பு வழங்கியுள்ளார். அப்போது சிறுமியின் பக்கத்துக்கு வீட்டில் தனிமையாக பல வருடங்களாக ஒருவர் வசித்து வருகிறார். அவருக்கும் கேக் கொடுக்க தான்யாவும் அவரது அப்பாவும் சென்றுள்ளனர். அப்போது, அன்பாக வரவேற்ற பக்கத்து வீட்டுக்காரர், நான் தனிமையிலேயே பல வருடங்கள் வாழ்கிறேன். எனக்கு ஆறுதலுக்கு கூட யாரும் இல்லை என்று மனம் உருகி பேசியிருக்கிறார்.
அப்போது, எதார்த்தமாக தனது பிறந்தநாள் தேதியையும் அவர் கூறியுள்ளார். அந்த தேதியை தான்யா ஞாபகம் வைத்து கொண்டு, அவரின் பிறந்த நாள் அன்று அவருக்கு சர்ப்ரைஸ் கொடுக்க நினைத்துள்ளார். அதேபோல், அவரின் பிறந்தநாளன்று, காலையில் எழுந்து கேக் தயாரிப்பதற்கு தேவையான எல்லா பொருட்களையும் தயார் செய்து வைத்து விட்டு பள்ளிக்கு சென்று விட்டார். மாலையில் பள்ளியிலிருந்து வந்தவுடன், கேக் தயாரித்து எடுத்து கொண்டு பக்கத்துக்கு வீட்டின் காலிங் பெல்லை அடித்துள்ளார்.
கதவை திறந்தவுடன் கேக் உடன் நிற்கும் சிறுமியை பார்த்து ஆனந்த கண்ணீரில் மூழ்கி விட்டார் அந்த பக்கத்துக்கு வீட்டுக்காரர். பிறந்த நாளன்று இன்ப அதிர்ச்சி கொடுத்த அந்த சிறுமியை அன்பால் வாழ்த்தினார். மேலும் இது குறித்து தான்யாவின் அப்பா, என் மகளை நினைத்து நான் மிகவும் பெருமை படுகிறேன் என்று கூறியுள்ளார்.
சிறுமி தான்யா தனிமையில் இருந்தவருக்கு கேக் கொடுத்து சர்ப்ரைஸ் கொடுத்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஜோகன்னஸ்பர்க் : இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையே டி20 தொடர் கடந்த 1 வாரமாக நடைபெற்று வருகிறது. அந்த…
சென்னை : மன்னார் வளைகுடா, லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டி உள்ள தென்கிழக்கு அரபிக்கடலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சிகள் நிலவு…
சென்னை : இரண்டு வருடங்களுக்குப் பிறகு நடிகர் சூர்யாவிற்கு திரையரங்குகளில் ஒரு படம் வெளியாகி இருக்கிறது. அதிலும், ரசிகர்களிடையே பெரிதும்…
பிரிஸ்பேன் : பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் முன்னதாக நடைபெற்ற ஒருநாள் தொடரில்…
பெய்ரூட் : லெபனான் தலைநகரான பெய்ரூட்டில், இஸ்ரேல் ராணுவம் தற்போது வான்வெளித் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால், தாக்குதல் நடைபெறும்…
தூத்துக்குடி : தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்தில், 7,893…