அமெரிக்க பெண் ஒருவர் தான் அவசரமாக வெளியில் செல்வதால் தன் கைக்குழந்தையை தன் தோழியிடம் குழந்தையை ஒப்படைத்து விட்டு தான் வரும் வரை குழந்தையை பார்த்துக் கொள்ளும்படி கூறி சென்று உள்ளார்.
உடனே அப்பெண் ஒரு குழந்தைக்கு தேவையான அனைத்து பொருள்களும் இருக்கிறதா.? எனக் கேட்க அவர் ஒரு பையை கொடுத்து இதில் எல்லாமே இருக்கிறது என கூறிவிட்டு சென்றுள்ளார். இப்பெண்ணிற்கு ஏற்கனேவே ஒரு கைக்குழந்தை உள்ளது. இதனால் இரு குழந்தைகளை பார்த்துக் கொண்டு உள்ளார். அப்பெண் குழந்தை விட்டு சென்ற சில மணி நேரத்தில் தோழியின் குழந்தை பசியால் அழ ஆரம்பித்து ஆரம்பித்துள்ளது.
அவர் கொடுத்துள்ள பையில் ஏதாவது இருக்கிறதா என இப்பெண் பார்த்தார். ஆனால் எதுவும் இல்லை சரி தனது தோழிக்கு போன் செய்து கேட்கலாம் என போன் செய்தார்.ஆனால் அவர் போன் எடுக்கவில்லை. குழந்தை மிகவும் பசியால் கத்தி அழ ஆரம்பித்து உள்ளது.
உடனே இப்பெண் வேறு வழியில்லாமல் தனது தோழியின் குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்டி உள்ளார். பின்னர் மூன்று மணி நேரம் கழித்து தோழி திரும்பி வந்து உள்ளார். அவரிடம் நடந்ததை இப்பெண் எடுத்துச் சொல்ல குழந்தையின் தாய் இதைக் கேட்டதும் முகம் மாறியது.
இதில் கோபமடைந்த குழந்தையின் தாய் ஏதேதோ சொல்லி சண்டை போட்டுள்ளார். உடனே இப்பெண் எனக்கும் குழந்தை உள்ளது .நான் தடுப்பூசி எல்லாம் போட்டு இருக்கிறேன். எனக்கு எந்த நோயும் இல்லை என கூறியுள்ளார்.ஆனால் இதையெல்லாம் கேட்காத குழந்தையின் தாய் குழந்தையை எடுத்துக்கொண்டு கோபமாக வீட்டிற்கு சென்றுள்ளார்.
வீட்டிற்கு சென்ற உடனே சமூக வலைத்தள கணக்குகளில் இப்பெண்ணை பிளாக் செய்துள்ளார். 10 ஆண்டுகளாக தோழியாக இருந்தவர் பசியால் துடித்த குழந்தைக்குப் பால் கொடுப்பதற்காக இப்படி சண்டை போட்டு சென்றுவிட்டார் என குழந்தைக்கு தாய் பால் கொடுத்த அப்பெண் கூறியுள்ளார்.
அப்போதும் கோபம்குறையாத அக்குழந்தையின் தாய் குழந்தை பாதுகாப்பு அமைப்பில் இதுகுறித்து புகாரும் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து மூன்றாவது நாளாக உயர்ந்து காணப்படுகிறது. இன்று மட்டும் சவரனுக்கு ரூ.200 உயர்ந்திருக்கிறது.…
சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையின் இன்றயை நிகழ்வுகளில் பங்கேற்க வந்த திமுக சட்டமன்ற உறுப்பினர்கள், 'இவன்தான் அந்த சார்' என அண்ணா…
சென்னை: விஜயின் தமிழக வெற்றிக்கழக மாவட்ட பொறுப்பாளர்கள் கூட்டம் சென்னை பனையூர் அலுவலகத்தில் இன்று நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில்…
சென்னை: பெரியார் குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் சில கருத்துகளை தெரிவித்து இருந்தார். இது தற்போது அரசியல்…
சென்னை : இந்திய கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சனுக்கு அணியில் விளையாட வாய்ப்புகள் சரியாக வழங்கப்படாதது ஒரு பெரிய கேள்விக்குறியான…
சென்னை : 2025ஆம் ஆண்டில் தமிழ்நாட்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த திங்கட்கிழமை முதல் தொடங்கி நடந்து வருகிறது. இன்று 5-ஆம்…