மீண்டும் பொதுமுடக்கம் அமல்படுத்தப்படாது – அமெரிக்க அதிபர் ட்ரம்ப்
அமெரிக்காவில் மீண்டும் பொது முடக்கம் அமல்படுத்தப்படாது.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், உலக அளவில் கொரோனா பாதிப்பில், வல்லரசு நாடான அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அமெரிக்காவில், இதுவரை இந்த வைரஸ் பாதிப்பால், 8,216,315 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 222,717 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், அந்நாட்டு சுகாதாரத்தறை அதிகாரிகள் இதுகுறித்து கூறுகையில், அமெரிக்காவில் கொரோனா நோய் தாக்கம் கடந்த வாரத்தை விட 11 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும், நோய்த்தொற்று பரவல் தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும், அமெரிக்காவில் இரண்டாவது அலை பரவத்தொடங்கியுள்ளதாவும் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், அமெரிக்க அதிபர் ட்ரம்ப், தங்களுடைய நோய் தடுப்பு பணி நன்றாகவே நடைபெற்று வருவதாகவும், மீண்டும் பொதுமுடக்கம் அமல்படுத்தப்படாது என்றும் தெரிவித்துள்ளார்.