பாகிஸ்தானில் உள்ள இந்து பெண்கள் கடத்தப்பட்டு , அவர்களை கட்டாயமாக மத மாற்றம் செய்து திருமணம் செய்து கொள்வதாக அமெரிக்காவை சேர்ந்த அறக்கட்டளை ஒன்று கூறியுள்ளது.
இந்துகள் அதிகம் வாழும் சிந்து மாகாணத்தில் இந்த சம்பவம் அதிகரித்து உள்ளது.கடந்த 14-ம் தேதி சிந்து மாகாணத்தில் 2 சிறுமிகள் கடத்தப்பட்டனர். அப்பகுதியில் இந்த சம்பவம் பெரும் பரப்பை ஏற்படுத்தியது.இதையெடுத்து டெல்லியில் இருக்கும் பாகிஸ்தான் தூதரக மூத்த அதிகாரியை அழைத்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கடும் கண்டனம் தெரிவித்தது.
இந்த சம்பவம் அடங்குவதற்குள் மீண்டும் சிந்து மாகாணத்தில் திருமணத்தின்போது மணப்பெண்ணை கடத்தி சென்று மதம் மாற்றம் செய்து திருமணம் செய்து கொண்டனர். பாரதி பாய் (24) என்ற இளம் பெண்ணுக்கு திருமணம் நடக்க இருந்தது. திருமண நாளன்று மண்டபத்தில் மணபெண்ணின் உறவினர்களும் , மணமகனின் உறவினர்களும் இருந்தனர்.
அப்போது அங்கு வந்த மர்ம கும்பல் பாரதி பாயை கடத்தி சென்றனர். இது குறித்து பாரதி பாயின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.அதில் , சாருக் குல் என்ற இளைஞர் கூலிப்படையுடன் வந்து தனது மகளை கடத்தி சென்றதாக கூறினார்.
பின்னர் பாரதி பாய் மதம் மாறிய சான்றிதழும் , அவருக்கும் சாருக் குல் என்ற இளைஞருக்கும் திருமணம் நடந்த சான்றிதழ் இணையத்தில் வெளியாகியது. இணைதளத்தில் வெளியான மத மாற்ற சான்றிதழில் கடந்த மாதம் 1-ம் தேதி பாரதி பாய் மதம் மாறியதாகவும் , அவரது பெயர் புஷ்ரா எனவும் இருந்தது.
இந்த மத மாற்று சான்றிதழ் போலியானது எனது மகள் வலுக்கட்டாயமாக திருமணம் செய்யப்பட்டதாகவும் பாரதி பாயின் தந்தை குற்றம் சாட்டினார். மேலும் தங்களது மகளை மீட்டு தருமாறு போலீசாரிடம் அவர் கோரிக்கை வைத்தார்.
மும்பை : இன்றைய லீக் ஆட்டத்தில், மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற உள்ளது. இந்த…
பெல்ஜியம்: GT4 தொடர் விரைவில் தொடங்கவுள்ள நிலையில், அஜித் குமாரின் பந்தயக் குழு பெல்ஜியத்தின் புகழ்பெற்ற சர்க்யூட் டி ஸ்பாவிற்கு…
சென்னை : கடந்த ஏப்ரல் 8 ஆம் தேதி, தந்தை பெரியார் திராவிடர் கழகம் நடத்திய ஈ.வி. ராமசாமியை (பெரியார்)…
சென்னை : வக்ஃப் திருத்த சட்டத்தின்படி புதிய உறுப்பினர்களை நியமனம் செய்யக் கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும்,…
டெல்லி : நேற்று நடைபெற்ற ஐபிஎல் தொடரில் டெல்லி அணியும் ராஜஸ்தான் அணியும்மோதியது . இந்த போட்டி சூப்பர் ஓவர் வரை…
டெல்லி : உச்ச நீதிமன்றம், ஒரு முக்கியமான தீர்ப்பில், குடியரசுத் தலைவர் மற்றும் ஆளுநர்கள் சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க…